Sunday, 23 October 2011

ஆப்பிள் ஐபேட்-2 மற்றும் அமேசான் கிண்டில் பயர் டேப்லெட்கள் ஒப்பீடு


ஆப்பிள் ஐபேட்-2 மற்றும் அமேசான் கிண்டில் பயர் டேப்லெட்கள் ஒப்பீடு

Newsletter
Free Newsletter
Its Free!
உங்கள் இன்பாக்சி்ல் லேட்டஸ்ட் செய்திகள்
Ads by Google
Dell UK - Official Site  www.Dell.com/uk
Amazing Dell Laptop Offers With 2nd Gen Intel® Core™. Buy Online!
Ipad2 Vs Amazon Kindle
Ads by Google
Building Survey 
Always Reliable-Always Competitive. Expert Land Surveyors.survey-solutions.co.uk
டேப்லட் துறை கனிசமான அளவில் முன்னேற்றம் அடைந்து வருகிறது என்பது எல்லோரும் அறிந்ததே. இந்த துறையில் மொபைல் மற்றும் கனிணிகள் ஒரு நிலையான இடத்தைப் பிடிக்க போட்டா போட்டி நடக்கின்றன.

இந்த நிலையில், மார்க்கெட்டில் சக்கை போடு போடும் ஆப்பிள் ஐபேட்-2 மற்றும் அமேசானின் கிண்டில் பயர் டேப்லெட்டுகளின் சிறப்பம்சங்களை ஒப்பிட்டு பார்க்கலாம்.

அமேசான் கின்டில் பயர் மற்றும் ஆப்பிள் ஐபேட்2 ஆகிய இரண்டுமே பார்ப்பதற்கு பக்காவாக உள்ளன. கின்டில் பயர் 1024*600 பிக்சல் ரிசலூசனுடன் 7 இன்ச் டிஸ்ப்ளேயைக் கொண்டுள்ளது.

அதுபோல் ஆப்பிள் ஐபேட்2 9.7 இன்ச் டிஸ்ப்ளேயுடன் 1024*768 பிக்சல் ரிசலூசன் கொண்டுள்ளது. கின்டில் பயரை விட ஐபேடின் டிஸ்பிளே அளவு அதிகமாகும். கின்டில் பயர் 2.3 ஆன்ட்ராய்டு இயங்குதளம் கொண்டுள்ளது. அதே நேரத்தில் ஐபேட்2 ஐஓஎஸ் இயங்குதளம் கொண்டுள்ளது.

எடையைப் பொறுத்தவரை கின்டில் பயர் 414 கிராமும் ஐபேட் 613 கிராமும் கொண்டுள்ளன. கின்டில் பயர் நவீன் அமேசான் சில்க் ப்ரவுசரைக் கொண்டுள்ளது. ஆனால் ஐபேட்2 பிரபலமான் சபாரி ப்ரவுசரைக் கொண்டுள்ளது. கின்டில் பயர் டூவல் கோர் 1ஜிஹெர்ட்ஸ் டி1 ஒஎம்எபி 4 ப்ராசஸர் கொண்டுள்ளது.

ஆனால் ஐபேட்2 1ஜிஹெர்ட்ஸ் ஆப்பிள் எ5 ப்ராசஸர் கொண்டுள்ளது. ஆனால் இரண்டுமே 512எம்பி ரேம் கொண்டுள்ளன. சேமிப்பைப் பொறுத்தவரை கின்டில் பயர் 8ஜிபியையும் அதே நேரத்தில் ஐபேட் 16ஜிபி, 32ஜிபி மற்றும் 64ஜிபி போன்ற அளவுகளில் வருகிறது. அதனால் ஆப்பிளின் ஐபேட்2 கின்டில் பயரைவிட ஒரு படி மேலே இருக்கிறது என சொல்லலாம்.

இரண்டுமே வைபை 802.11 பி/ஜி/என் கொண்டிருக்கின்றன. ஐபேட்2 இன்பில்ட் 0.7 மெகாபிக்சல் கேமராவுடன் வருகிறது. இந்த கேமரா 720பி வசதியை கொடுக்கிறது. ஆனால் கின்டில் பயரில் கேமரா இல்லை. அதுபோல் ஐபேடில் இருக்கும் ஜிபிஎஸ் தொழில் நுட்பமும் மற்றும் ப்ளூடூத் வசதியும் கின்டில் பயரில் இல்லை.

பேட்டரி திறனை எடுத்துக் கொண்டால் கின்டில் பயர் டேப்லட் 8 மணி நேரமும் ஐபேட் 10 மணி நேரமும் தாங்கும் வலிமை கொண்டவை.

விலையைப் பொறுத்தவரை கின்டில் பயர் ஐபேட்2வை விட குறைவே. அதாவது கின்டில் பயர் ரூ.9000க்கு கிடைக்கிறது. அதே நேரத்தில் ஐபேட்-2 ரூ.22500 விலையில் கிடைக்கிறது.

No comments: