Showing posts with label முக்கிய செய்திகள். Show all posts
Showing posts with label முக்கிய செய்திகள். Show all posts

Monday, 7 November 2011

கொக்கா கோலா குடிப்பவரா நீங்கள் ? உங்களுக்கான எச்சரிக்கை இது !




கொக்கா கோலா குடிப்பவரா நீங்கள் ? உங்களுக்கான எச்சரிக்கை இது !

கொக்கா கோலா பாணம் (Coca Cola) சர்வதேச அளவில் பிரபல்யமான அனைத்து நாட்டவர்களும் அருந்தக்கூடிய ஒரு குளிர்பாணம் என்பது யாவரும் அறிந்த உண்மை. ஆனால் அதில் சுவைக்காக பல இரசாயன பதார்த்தங்கள் உள்ளடக்கபட்டுள்ளமை அனேகமானவர்களுக்கு தெரிவதில்லை.
அது அவர்களுக்கு மட்டுமே தெரிந்த கலவை இரகசியம். ஆனால் இந்த கொக்கா கோலா பாணத்தில் உள்ள இராசாயண பதார்த்தங்களை சோதிக்கும் நடவடிக்கை ஒன்றையே நாம் இன்று வழங்குகிறோம். காணொளியை கவனமாக பாருங்கள்.

கொகோ கோலா பாணத்தினை ஒருவர் கிளாசில் ஊற்றி அதனுள் ஒரு முட்டையை இடுகிறார். இதனை ஒரு வருடத்திற்கு அப்படியே பத்திரப்படுத்தி வைக்கப்படுகிறது. பின்னர் சரியாக ஒரு வருடத்திற்கு பிறகு கோகோ கோலா பாணத்திற்குள் இட்டு வைத்திருந்த முட்டை வெளியே எடுக்கப்படுகிறது. என்ன ஒரு அதிர்ச்சி …


  

Sunday, 23 October 2011

குழந்தைகளை சாப்பிடச் சொல்லி தொந்தரவு செய்ய வேண்டாம்: ஆய்வாளர்கள் வலியுறுத்தல்


குழந்தைகளை சாப்பிடச் சொல்லி தொந்தரவு செய்ய வேண்டாம்: ஆய்வாளர்கள் வலியுறுத்தல்

“இந்த காய் சாப்பிடு, அந்த காய் சாப்பிடு’’ என்று குழந்தைகளை அளவுக்கு மீறி தொந்தரவு செய்தால் அவர்கள் சாப்பிடும் அளவு குறைந்துவிடும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
சொக்லேட், ஐஸ்கிரீம் எவ்வளவு கொடுத்தாலும் பிள்ளைகள் சாப்பிடுவார்கள். சோறு என்றாலே எரிச்சலாவார்கள். நாலு வாய் சோற்றை அரை மணி நேரமாக சாப்பிடுவது இதன் வெளிப்பாடு.
இதுபற்றி அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநில பல்கலைக்கழகம் மற்றும் அப்பலேச்சியன் பல்கலைக்கழக உளவியல் துறை பேராசிரியர்கள் இணைந்து சமீபத்தில் ஆய்வு நடத்தினர்.
4 வயது குழந்தைகளை வைத்து இந்த ஆய்வு நடத்தப்பட்டது. ஆராய்ச்சி முடிவில் கூறப்பட்டிருப்பதாவது: அதிக சத்துள்ள காய்கறிகள், பழங்கள் சாப்பிட வேண்டும் என்ற ஆர்வம் குழந்தைகளுக்கு இயல்பாகவே உண்டு.
ஆனால் “இதை சாப்பிடு, அதை சாப்பிடு. இதில் நிறைய சத்து இருக்கிறது” என்று பெற்றோர் திரும்ப திரும்ப சொல்லும் போது அந்த உணவு மீது அவர்களுக்கு வெறுப்பு வருகிறது. அதை தவிர்க்க ஆரம்பிக்கின்றனர்.
ஒரு காய், பழம் அல்லது உணவு பொருளை குழந்தைகளிடம் கொடுத்து சாப்பிடு, சாப்பிடு என்று பல முறை கட்டாயப்படுத்துவதைவிட அவர்கள் போக்கிலேயே விட்டுவிடுவது நல்லது.
இதில் ஏதோ சத்து அல்லது ருசி இருப்பது போல தெரிகிறது. சாப்பிட்டுத்தான் பார்க்கலாமே என்ற முடிவுக்கு வந்து அவர்களாகவே சாப்பிடுவார்கள்.

வேலை தேடுபவர்களுக்கு உதவும் பயனுள்ள இணையம்


வேலை தேடுபவர்களுக்கு உதவும் பயனுள்ள இணையம்

வேலை தேடுபவர்களுக்கு பயோடேட்டாவின் முக்கியத்துவம் நன்றாகவே தெரியும். நல்ல வேலை கிடைப்பது நல்ல பயோடேட்டாவை சார்ந்தே இருக்கிறது.
பயோடேட்டா பளிச் என்று பக்காவாக இருந்தால் வேலை கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகம் என்பதும் வேலை தேடும் எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். ஆனால் பலருக்கும் தெரியாத விஷயம் பக்காவான பயோடேட்டாவை தயாரிப்பது எப்படி என்பது தான். அதிலும் புதிதாக வேலை தேடுபவர்களுக்கு இந்த குழப்பம் அதிகமாகவே இருக்கும்.
நல்ல பயோடேட்டாவிக்கு என்று எழுதப்படாத விதிகள் எதுவும் இல்லாவிட்டாலும் பலவித குறிப்புகளும் ஆலோசனைகளும் கொட்டிக்கிடக்கின்றன. இவை மேலும் குழப்பலாம்.
பயோடேட்டா விரிவாக இருக்க வேண்டும் என்று சொல்லப்படுவதை தவறாக புரிந்து கொண்டு பக்கம் பக்கமாக பயோடேட்டாவை தயார் செய்தால் அது எதிர்பார்த்த பலனை தர வாய்ப்பில்லை.
அதே போல கூடுதல் அம்சங்கள் இருக்க வேண்டும் என்பதற்காக எதையாவது சேர்த்து கொண்டால் பயோடேட்டா பயோடேட்டாவாக இருக்காது.
பயோடேட்டா நிறுவன அதிகாரியை கவரும் வகையில் இருக்க வேண்டும் என்பதற்காக அதில் அலங்காரங்க‌ளையும் பொய்யான தகவல்களையும் இடம்பெற வைக்க வேண்டியதில்லை.
பக்காவான, செயல்திறன் மிக்க பயோடேட்டாவை உருவாக்கி கொள்ள உதவுவதாக கூறும் இந்த தளம் மிக அழகாக அதனை செய்தும் த‌ருகிற‌து. அதையும் சுலபமாக, உடனடியாக செய்து தருகிறது.
இந்த தள‌த்திற்கு வந்த பின் ஒரு ந‌ல்ல பயோடேட்டா எப்படி இருக்க வேண்டும் என்ற கவலையோ குழப்பமோ தேவையில்லை. அதை இந்த தளம் பார்த்து கொள்கிறது.
வேலை தேடுபவரின் நோக்கம், கல்வி தகுதி, பணி அனுபவம் போன்ற‌ விவரங்களை சமர்பித்தால் போதும் அதை கொண்டு அழகான பயோடேட்டா ரெடியாகி விடுகிற‌து.
பயோடேட்டாக்களுக்கு என்று நாலைந்து வகையான பொதுவான டெம்ப்லேட்கள் இருக்கின்ற‌ன. அவற்றில் விருப்பமானதை தேர்வு செய்து கொள்ளலாம்.
அதற்கு முன்பாக பாயோடேட்டாக்களின் மாதிரியை பார்த்து கொள்ள்லாம். துறைவாரியாக சம்பிக்கப்பட்ட பயோடேட்டாக்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. எல்லாமே ஒரே பக்கம் மட்டுமே இருக்கின்றன.
ஆனால் மூர்த்தி தான சிறியதே தவிர கீர்த்தி பெரிது தான். அந்த ஒரு பக்கத்திலேயே வேலைக்கு விண்ணபிப்பவர் பற்றி தெரியவேண்டிய அனைத்து விவரங்களும் வந்து விடுகின்ற‌ன. பயோடேட்டா என்பது வேலை தேடுபவரின் அறிமுக அட்டை என்றால் இந்த தளம் உருவாக்கி த‌ருபவை அதை கச்சிதமாக நிறைவேற்றுகின்றன.
ஆக பக்காவான பயோடேட்டாவை வெகு சுலபமாக இந்த தளத்தின் மூலம் உருவாக்கி கொண்டு விடலாம். இது முதல் படி தான். இந்த பக்காவான பயோடேட்டாவை அப்படியே அச்சிட்டு கொள்ளலாம்.
பிடிஎப் கோப்பாக மாற்றிக்கொள்ள‌லாம். இணையத்தின் மூலம் வேலைக்கு விண்ணப்பிக்கலாம். பேஸ்புக் மற்றும் டிவிட்டர் போன்ற சமூக வலைப்பின்னல் தள‌ங்கள் மூலம் பகிர்ந்து கொள்ள‌லாம்.‌
ப‌யோடேட்டாக்கள் நிறுவனங்களால் எத்தனை முறை பார்க்கப்பட்டுள்ளன போன்ற விவரங்களையும் தெரிந்து கொள்ள‌லாம். வேலை வாய்ப்புக்கான பயனுள்ள குறிப்புகளும் வழங்கப்படும். பொருத்தமான வேலை வாய்ப்பு பற்றிய தகவலும் தெரிவிக்கும் வசதியும் இருக்கிற‌து. வேலை தேடுபவர்களுக்கு கைகொடுக்க கூடிய தளம் என்ப‌தில் சந்தேகமில்லை.

குழந்தைகளுக்கான இணையதளங்கள்


குழந்தைகளுக்கான இணையதளங்கள்

தங்களது குழந்தைகளை நல்ல பண்புகளுடன் உருவாக்குவதே இன்றைய பெற்றோர்களின் சிறந்த கனவாக உள்ளது.
நம் வாழ்க்கையுடன் ஒன்றிவிட்ட கணணியும், இணையமும் இதற்குப் பல வழிகளைத் தருகிறது. ஒரு நல்ல கணணியும், அதற்கான பிராட்பேண்ட் இணைப்பும் இருந்தால் குழந்தைகள் தங்கள் நேரத்தை நல்ல வழிகளில் பயன்படுத்த பெற்றோர்கள் துணைபுரியலாம்.
குழந்தைகளுக்கு விளையாட்டு என்பது அவர்களின் இயற்கையோடு இணைந்த ஒன்று. அதன் வழியாகவே அவர்களின் மன வளர்ச்சியை நல்ல முறையில் உருவாக்கலாம். உலக விஷயங்களைக் கற்றுக் கொடுக்கலாம். அதற்கென உள்ள பல இணையதளங்கள் உள்ளன.
1. கல்வி விளையாட்டுக்கள், வேடிக்கையான கேம்ஸ், ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்குமான தகவல்கள், கலை அம்சம் நிறைந்த பலவற்றிற்கு 20 ஆயிரத்திற்கு மேலான இணைய தொடர்புகள், வண்ணம் தீட்டி பழக தளங்கள், கணக்கு பழக பயிற்சிகள் மற்றும் தரவிறக்கம் செய்து வைத்து விளையாட கேம்ஸ் என அனைத்து வகைகளிலும் குழந்தைகளுக்கான இணையக் களஞ்சியமாக இயங்குகிறது http://www.links4kids.co.uk/ என்ற முகவரியில் உள்ள தளம்.
2. நூற்றுக்கணக்கில் இன்டர்நெட் இணைப்பில் விளையாட கேம்ஸ், கார்டூன், மூவி கிளிப்கள், மியூசிக் வீடியோ, புதிர்கள், கற்பனைத் திறனை ஊக்கப்படுத்தும் செயல்பாடுகள், பக்கங்களுக்குக் கலர் தீட்டுதல், பாதுகாப்பான வழிகளில் இணையத் தேடல் என வேடிக்கை விளையாட்டுக்களையும் கல்வி கற்றலையும் இணைத்து தருகிறது http://alfy.com/ என்ற முகவரியில் உள்ள இணைய தளம்.
3. http://www.surfnetkids.com/ என்ற தளத்தில் பல்வேறு வித்தியாசமான கேம்ஸ், வேடிக்கை விளையாட்டுக்கள், குழந்தைகளுக்கான தகவல்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் குழந்தைகளுக்குக் கற்றுத் தர விரும்பும் விஷயங்கள், நினைவாற்றலை வளர்க்கும் விளையாட்டுக்கள் எனப் பல வகைகளில் குழந்தைகளுக்கான அனைத்து விஷயங்களும் வித்தியாசமான முறையில் தரப்பட்டுள்ளன.
4.குழந்தைகளுக்கு கணக்குகளைத் தந்து அவர்களின் சிந்திக்கும் திறனை வளர்க்கும் தளமாக விளங்குகிறது http://www.coolmath4kids.com/ உலக அளவில் இது சிறந்த தளம் என்ற பாராட்டினைப் பல அமைப்புகளில் இருந்து பெற்றது.
குழந்தைகளுக்கு கூட்டல், கழித்தலில் தொடங்கி அல்ஜிப்ரா, பின்னங்கள், டெசிமல் கணக்குகள் என கணக்கின் அடிப்படையையும் அதன் தொடர்பான பிறவற்றையும் கற்றுத்தரும் பல தளங்கள் இணையத்தில் உள்ளன. இவை அனைத்தும் கணக்கியலை விளையாட்டுக்கள் மூலமும் புதிர்கள் மூலமும் கற்றுத் தருகின்றன.

தொலைக்காட்சி பார்ப்பதால் குழந்தையின் வளர்ச்சி பாதிக்கப்படும்: ஆய்வில் தகவல்


தொலைக்காட்சி பார்ப்பதால் குழந்தையின் வளர்ச்சி பாதிக்கப்படும்: ஆய்வில் தகவல்

இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள் தொலைக்காட்சி பார்த்தால் அவர்களின் வளர்ச்சி பாதிக்கப்படுவதாக அமெரிக்க நிபுணர்களின் ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.
குழந்தை மருத்துவத்துக்கான அமெரிக்க அகாடமி குழந்தைகள் தொலைக்காட்சி பார்ப்பதால் ஏற்படும் பின்விளைவுகள் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டது.
ஆராய்ச்சியின் முடிவில் 2 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தொடர்ந்து தொலைக்காட்சி பார்த்து வருவார்களேயானால் அவர்களின் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படுவதாகக் கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் அத்தகைய குழந்தைகளின் பேச்சுத்திறன் தாமதப்படுவதாகவும் நிபுணர்கள் தெரிவித்தனர்.
இந்தக் குறைபாடுகளைப் போக்க இந்த வயது வரம்புக்குள்பட்ட குழந்தைகள் தொலைக்காட்சி பார்ப்பதை தவிர்க்க அவர்களிடம் பெற்றோர்கள் பேச்சுக் கொடுக்க வேண்டும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.

பிரிட்டன் கோர்ட்டில் முதன் முறையாக இந்திய நீதிபதி

பிரிட்டன் கோர்ட்டில் முதன் முறையாக இந்திய நீதிபதி
பிரிட்டன் ஐகோர்ட்டில் முதன்முறையாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வழக்கறிஞரான சீக்கியர் ஒருவர் நீதிபதியாகப் பொறுப்பேற்றுள்ளார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரபீந்தர் சிங்(47) என்பவர் லண்டனில் உள்ள ராயல் கோர்ட் வளாகத்தில் இயங்கி வரும் ஐகோர்ட்டின் நீதிபதியாக நேற்று முன்தினம் பொறுப்பேற்றுள்ளார்.
இவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்தவர். இவர் 2007ல் இந்திய டாக்டர்களின் குடியேற்ற உரிமை தொடர்பான வழக்கில் சிறப்பாக வாதாடியவர்.
கடந்த 22 ஆண்டுகளாக பிரிட்டனில் வழக்கறிஞராகப் பணியாற்றி வருபவர். தனது நியமனம் குறித்து அளித்த பேட்டியில்,"எனது பணி மூலம் நான் ஒரு சிறந்த முன்னுதாரணமாக இருக்க முயல்வேன்” என ரபீந்தர் சிங் கூறினார்.

கடாபியை சுட்டுக் கொண்ட வாலிபர் பரபரப்பு பேட்டி


கடாபியை சுட்டுக் கொண்ட வாலிபர் பரபரப்பு பேட்டி
[ ஞாயிற்றுக்கிழமை, 23 ஒக்ரோபர் 2011, 08:32.33 மு.ப GMT ]
லிபிய முன்னாள் அதிபர் கடாபியை சுட்டுக் கொன்றது நான் தான் என்று வாலிபர் ஒருவர் கூறியுள்ளார்.
லிபிய முன்னாள் அதிபர் கடாபியை எதிர்த்து கடந்த 9 மாதங்களாக புரட்சிப் படையினர் தாக்குதல் நடத்தி வந்தனர்.
கடந்த 20ம் திகதி சொந்த ஊரான சிர்தேவில் சுட்டுக் கொல்லப்பட்டார். இதுகுறித்து ஐ.நா. அறிக்கை கேட்டுள்ளது.
இந்நிலையில் கடாபியை சுட்டுக் கொன்றது நான்தான் என்று சனாத் அல்சதக் அல்யுரிபி என்ற வாலிபர் கூறியுள்ளார். இதற்கு ஆதாரமாக இன்டர்நெட்டில் புதிய வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் சனாத்தை சிலர் பேட்டி எடுக்கின்றனர். அவரை சுற்றி சிலர் ராணுவ உடையில் இருக்கின்றனர். சிலர் சனாத்தை பாராட்டுகின்றனர்.
கடாபியின் தங்க மோதிரம், ரத்தக் கறை படிந்த சட்டையை காட்டுகின்றனர். அந்த தங்க மோதிரத்தில் கடாபியின் 2வது மனைவி சபியாவின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.
பேட்டியின் போது, கடாபியை 2 முறை துப்பாக்கியால் சுட்டேன். ஒரு குண்டு அவரது தோளிலும் மற்றொரு குண்டு தலையிலும் பாய்ந்தது. ஆனால் கடாபி உடனடியாக சாகவில்லை. அரை மணி நேரம் கழித்துதான் இறந்தார் என்று சனாத் கூறியுள்ளார்.

வெளிநாட்டவர்களைக் கவர 10,000 இலவச விமான டிக்கெட் வழங்கும் ஜப்பான்


வெளிநாட்டவர்களைக் கவர 10,000 இலவச விமான டிக்கெட் வழங்கும் ஜப்பான்

Newsletter
Free Newsletter
Its Free!
உங்கள் இன்பாக்சி்ல் லேட்டஸ்ட் செய்திகள்
Ads by Google
Dell UK - Official Site  www.Dell.com/uk
Amazing Dell Laptop Offers With 2nd Gen Intel® Core™. Buy Online!
Japan
Ads by Google
Need A Land Survey? 
Norwich Surveyors Dedicated, Accurate & Economical.survey-solutions.co.uk
டோக்கியோ: ஜப்பான் நாட்டிற்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில், அடுத்தாண்டு 10,000 பேருக்கு இலவச விமான டிக்கெட்களை வழங்க அந்நாட்டின் சுற்றுலா துறை திட்டமிட்டுள்ளது.

ஜப்பான் நாடு பல அழகிய தீவுகளையும், இயற்கை எழில் சூழ்ந்த பல தலங்களையும் கொண்ட நாடு. ஜப்பானுக்கு வருவாய் ஈட்டித் தரும் துறைகளில் சுற்றுலாவும் ஒன்று.

ஆனால் சமீபத்தில் நடந்த சுனாமித் தாக்குதல், புகுஷிமா அணு உலை வெடிப்பு உள்ளிட்டவற்றால் ஜப்பான் மீது உலக மக்களுக்குப் பீதியாகி விட்டது. இதனால் கடந்தாண்டை விட இந்தாண்டு 32 சதவீத சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதையடுத்து ஜப்பான் அரசு, புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. அடுத்தாண்டு ஜப்பான் வரும் சுற்றுலா பயணிகளில் 10,000 பேருக்கு இலவச விமான டிக்கெட்களை வழங்க உள்ளது.

இத்திட்டம் குறித்த மசோதா அந்நாட்டு அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில், இதற்கான விண்ணப்பங்கள் விரைவில் ஆன்-லைனில் வெளியிடப்படும்.

இத்திட்டத்தின்படி, சுற்றுலா பயணிகளின் விமான கட்டணம் மட்டுமே இலவசமாக வழங்கப்படும். மற்றபடி ஊருக்கு வந்த பின்னர், உணவு, தங்குவசதி உள்ளிட்ட மற்ற செலவுகளை சுற்றுலாப் பயணிகள்தான் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இந்த திட்டத்திற்கு அடுத்த மார்ச் மாதம் நடக்கும் பட்ஜெட்டில் அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொல்லப்படுவதற்கு முன்பு 'தம்'மடித்த கடாபியின் மகன்

ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 23, 2011, 16:02

Gaddafi Son
Ads by Google
Unsecured Loan Online 
£250 to £25k Loan For Any Purpose. Bad Credit, CCJ's & Tenants OK.UnsecuredLoanCompany.net/BadCredit
திரிபோலி: புரட்சி படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட லிபிய முன்னாள் அதிபர் கடாபியின் மகன் முத்தாசிம் கடாபியையும் புரட்சிப் படை சுட்டுக் கொன்றது. சிறை பிடித்து பின்னர் அவரைக் கொன்றனர். கொல்லப்படுவதற்கு முன்பு முத்தாசிம் எந்தவித பதட்டமும் இல்லாமல் இருந்துள்ளார். சிகரெட் பிடித்தபடியும், தண்ணீர் பிடித்தபடியும் அவர் காணப்படுவது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது.


லிபிய முன்னாள் அதிபர் கடாபி தனது சொந்த ஊரான சிர்டேவில் வைத்து புரட்சிப்படையால் கடந்த 20ம் தேதி சுட்டுக்கொல்லபப்ட்டார். அதே நாளில் ரகசிய இடத்தில் பதுங்கியிருந்த கடாபியின் மகன் முத்தாசிம் கடாபியையும் புரட்சிப் படை பிடித்து சுட்டுக் கொன்றது.


கடாபியை புரட்சிப் படையினர் தாக்குதல் நடத்தியபோது அதில் இடம் பெற்றிருந்த முத்தாசிம் காயத்துடன் பிடிபட்டார். பின்னர் அவரை ஒரு இடத்தில் சிறை வைத்துள்ளனர். அவருக்கு காவலாக ஆயுதம் ஏந்தியவர்கள் நிற்பது போன்ற ஒரு வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.


தண்ணீர் பாட்டிலை எடுத்துத் தண்ணீர் குடிப்பது போலவும், சிகரெட் புகைப்பது போலவும், படுக்கையில் படுத்தபடி தனது காயத்தைப் பார்ப்பது போலவும் அந்தக் காட்சிகள் உள்ளன. பின்னர் அவரது இறந்த உடல் காட்டப்படுகிறது. அதில் நெஞ்சில் குண்டுக்காயம் காணப்படுகிறது.


இந்த நிலையில் கடாபி மிகக் கொடூரமாகக் கொல்லப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்துமாறு ஐ. நா. உத்தரவிட்டுள்ளது. ஆனால் கடாபி போன்ற கொடுங்கோலர்கள் மரணம் நல்ல விஷயம்தான் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் ஏற்கனவே வரவேற்றுள்ளதால் இந்த விசாரணை ஒரு உப்புக்குச் சப்பாணியாகவே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

லண்டன் பல்கலைக்கழகத்தினரால் உயிரினக் கட்டுப்பாட்டு கணணி அறிமுகம்


Biological computer எனப்படும் உயிரினக் கட்டுப்பாட்டு கணணி தொடர்பான ஆய்வு லண்டன் பல்கலைக்கழகத்தினரால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நுண்ணங்கிகள் மற்றும் DNA செயற்பாட்டில் டிஜிட்டல் முறைமையை புகுத்தல் இந்த உயிரினக் கட்டுப்பாட்டு கணனியியலின் நோக்கமாகும்.

எதிர்காலத்தில் இவ்வகையான கணனிகள் உடலினுள் செலுத்தப்பட்டு மனித கலங்களின் செயற்பாடுகளை கண்காணிக்கவும், குறைபாடுகளை நிவர்த்தி செய்யவும் பயன்படலாம்.

இது வெறும் தர்க்க ரீதியான எண்ணம் மட்டுமே, எனிலும் இந்த உயிரினக் கட்டுப்பாட்டு கணனியியல் முழுவதும் பூர்த்தியடைந்துவிட்டால் நாளடைவில் இது சாத்தியமே!

இதுபற்றி ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கையில் தாம் சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும், இதுவரை யாரும் நினைத்து பார்த்திராத அனுகூலங்களை பெற முடியுமெனவும், இதில் முதற்கட்டமாக கடலின் அடியில் வாழும் ஒருவகை மீனினங்களில் இதை பரிசோதிக்க திட்டமிட்டிருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.





  முகப்பு 
Share4          6552 தடவைகள் பார்வையிடப்பட்டுள்ளது

புகைப்பிடிப்போரும் புகை பிடிக்காதோரும் – ஒரு ஒப்பீட்டு ரீதியான ஆய்வு


20000 இளைஞர்களிடையே நடத்தப்பட்ட ஆய்வில் புகைப்பிடிக்காதவர்களைக் காட்டிலும் புகைப்பிடிப்பவர்களின் அறிவாற்றல் குறைவாக இருப்பது கணக்கிடப்பட்டுள்ளது.

தினமும் ஒரு பாக்கெட் சிகரெட் பிடிப்பவர்களின் அறிவுத்திறன், சராசரி ஆண்களை விட எட்டு புள்ளிகள் வரை குறைவாக இருக்கின்றது. தினமும் அவர்கள் புகைக்கும் சிகரெட்டின் எண்ணிக்கைக்கு ஏற்ப அறிவாற்றல் குறைவதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

புகைப்பழக்கம் இல்லாதவர்களுக்கு 101 புள்ளிகள் அறிவுத்திறன் இருக்கும் நிலையில் புகைப் பிடிப்பவர்களுக்கு 94 புள்ளிகள் மட்டுமே அறிவுத்திறன் இருக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கின்றனர் ஆய்வாளர்கள்.

மன அழுத்தம் அதிகம் உள்ள இளைஞர்களே அதிகம் புகைப்பிடிக்கின்றனர் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆனால் புகைப்பழக்கம் மன அழுத்தத்தை அதிகரித்து மனநல பாதிப்புகளுக்கு உள்ளாக்குகிறது மேலும் புகைப்பழக்கம் குடிப்பழக்கத்திற்கும் வழிவகுக்கிறது என்பது மருத்துவர்களின் எச்சரிக்கை.

புகைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் மாரடைப்பு, புற்றுநோய், ஆண்மைக்குறைவு போன்ற நோய்களால் பாதிக்கப்படுகின்றனர் என்பது தெரிந்த விசயம்.

ஆனால் மனைவிக்கு நுரையீரல் புற்றுநோய், இதயநோய் போன்றவற்றையும், குழந்தைகளுக்கு காதுகோளாறு, ஆகியவையும் பரப்புகின்றனர். புகைப்பழக்கத்தில் இருந்து மீள மனரீதியான சிகிச்சைகளை மேற்கொள்ளலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.

வேலையில் டென்சன் ஏற்பட்டால் புகையை நாடாமல் நல்ல இசையை ரசிக்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.

உடற்பயிற்சி, தியானம் போன்றவையும் ஆரோக்கிய வாழ்வுக்கு வழிவகுக்கும் என்பது மருத்துவர்களின் ஆலோசனை.

டிராம் வண்டியை ஆட்டையப் போட்டு நிதானமாக ஓட்டிய சிறுவன்! வியந்த பொலிஸார்


சிறுவர்களின் தந்திரமான செயல்களை பாருங்கள்... ரஷ்யாவில் டிராம் வண்டியை திருடி சென்ற சிறுவனை 40 நிமிடங்களுக்கு பின்னர் பொலிஸார் மடக்கினர்.
ரஷ்யாவைச் சேர்ந்த 15 வயது சிறுவன் டிராம் வண்டியை திருடி சென்று அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளான்.
இதுகுறித்து ஜிலாடவுஸ்ட் மூத்த பொலிஸ் அதிகாரி பாவெல் பாவ்லோவ் கூறியதாவது:
சமீபத்தில் யுரால் பகுதியில் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராம் வண்டியை சிறுவன் ஓட்டிச் சென்று விட்டான்.
வண்டி வழக்கமாக நிற்கும் நிறுத்தங்களில் நிறுத்தி, பயணிகளை ஏற்றிச் சென்றுள்ளான்.
இதனை சரியாகவே செய்துள்ளான். பயணிகள் இறங்க வேண்டிய இடங்களிலும் டிராமை நிறுத்தி உள்ளான்.
டிராம் ஓட்டுவது சிறுவன் என்பது தெரியாமல் மக்களும் அதில் பயணம் செய்துள்ளனர். டிராம் காணாமல் போன தகவல் கிடைத்தவுடன் உடனடியாக தேடுதல் வேட்டையில் இறங்கினோம்.
சுமார் 40 நிமிடங்கள் கழித்து அதை மடக்கினோம். அதை ஓட்டியது சிறுவன் என்று அதிர்ச்சி அடைந்து விட்டோம். இப்படி அப்பாவித் தனமாக கூறினார் பொலிஸார்.
டிராம் வண்டி பற்றி அவன் அதிகமாக படித்திருக்க வேண்டும்.
வண்டியை எப்படி இயக்குவது, எப்படி நிறுத்துவது என்று நன்கு தெரிந்து வைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் வண்டியை அவ்வளவு எளிதாக ஓட்ட முடியாது. 40 நிமிடங்களாக டிராம் ஓட்டினாலும், எந்த விபத்தையும் சிறுவன் ஏற்படுத்தவில்லை.
இதுகுறித்து பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.
வண்டியை திருடுபவர்களுக்கு 5 ஆண்டு தண்டனை விதிக்கப்படும். ஆனால், சிறுவனின் எதிர்காலம் கருதி அவனை கைது செய்யவில்லை. கடுமையாக எச்சரித்தோம்.
இவ்வாறு நடவடிக்கைக்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.

லண்டனில் 100 , 000 ஸ்டேர்லிங் பவுண்கள் சம்பாதிக்கும் சிறுவன்!


சிறுவன் ஒருவன் சம்பாதிக்கும் தொகையைப் பார்த்தீர்களா? பிச்சை எடுக்கும் சிறுவன் ஒருவன் வருடாந்தம் 100 000 ஸ்டேர்லிங் பவுண்கள் சம்பாதிப்பதாக அதிர்ச்சித் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
பிச்சை எடுக்கும் சிறுவர்களை வெளிநாடுகளைச் சேர்ந்த கொலைகாரக் குழுக்கள் கோடி கோடியாக பணம் சம்பாதிக்கும் நோக்கில் ஈடுபடுத்தியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
ரோமானியாவைச் சேர்ந்த கிப்ஸி இனத்தவர்கள் தான் குறித்த சிறுவர்களைப் பிச்சை எடுக்க பயன்படுத்தி பகட்டு வாழ்க்கை வாழ்வதாக தெரிய வந்துள்ளது.
இவர்கள் அரண்மனைகள், ஆடம்பரக் கார்கள் என்று வசதியாக மன்னர்கள் போல் வாழ்ந்து வருகிறார்கள். பிச்சைக்காரர்கள் தங்கள் குழந்தைகளையும் பிச்சை எடுப்பதிலேயே ஈடுபடுத்தி வருகிறார்கள்.
இப்படியான செயல்கள் பிரிட்டனில் ஊக்குவிக்கப்படுவதாகவும் தெரிய வந்துள்ளது.
பி.பி.சி இன் செய்தியாளர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில்,
லண்டனில் குழந்தையுடன் பிச்சை எடுக்கும் அம்மாக்களின் தொகையும் அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
நான்கு வயதுடைய ஆலிஸ் என்ற பெண் குழந்தை ஒன்று கொண்டுவரப்பட்டு பெரிய அங்கி ஒன்றை அணிவித்து லண்டனின் முக்கிய தெருக்களில் விடப்பட்டதாகவும் குறித்த செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

மூளையை பாதிக்கும் விடயங்கள்

காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு இரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும்.
இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்காமல் மூளை அழிவுக்குக் காரணமாகும்.
அதிகளவாகச் சாப்பிடுவதனால் மூளையில் இருக்கும் இரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்.
புகை பிடிப்பதனால் மூளை சுருங்கவும், அல்ரஸமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது. நிறைய இனிப்புச் சாப்பிடுவதனால் புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும் மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.
மாசு நிறைந்த காற்றை சுவாசிப்பதனால் நமக்குத் தேவையான ஆக்சிஜனை பெறுவதிலிருந்து தடை செய்கிறது. மூளைக்கு ஆக்சிஜன் செல்லா விட்டால் மூளை பாதிப்படையும்.
நல்ல உறக்கம் இல்லாமையால் மூளைக்கு ஓய்வு இல்லாமல் போகின்றது. தேவையான அளவு தூங்காமலிருப்பது நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும்.
தலையை மூடிக்கொண்டு நித்திரை செய்வதனால் போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள் சுவாசிக்கும் ஆக்சிஜனை குறைக்கிறது.
உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆன பிற்பாடு மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.
மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால் மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது. அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது.