Sunday, 23 October 2011

பிரிட்டன் கோர்ட்டில் முதன் முறையாக இந்திய நீதிபதி

பிரிட்டன் கோர்ட்டில் முதன் முறையாக இந்திய நீதிபதி
பிரிட்டன் ஐகோர்ட்டில் முதன்முறையாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வழக்கறிஞரான சீக்கியர் ஒருவர் நீதிபதியாகப் பொறுப்பேற்றுள்ளார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரபீந்தர் சிங்(47) என்பவர் லண்டனில் உள்ள ராயல் கோர்ட் வளாகத்தில் இயங்கி வரும் ஐகோர்ட்டின் நீதிபதியாக நேற்று முன்தினம் பொறுப்பேற்றுள்ளார்.
இவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்தவர். இவர் 2007ல் இந்திய டாக்டர்களின் குடியேற்ற உரிமை தொடர்பான வழக்கில் சிறப்பாக வாதாடியவர்.
கடந்த 22 ஆண்டுகளாக பிரிட்டனில் வழக்கறிஞராகப் பணியாற்றி வருபவர். தனது நியமனம் குறித்து அளித்த பேட்டியில்,"எனது பணி மூலம் நான் ஒரு சிறந்த முன்னுதாரணமாக இருக்க முயல்வேன்” என ரபீந்தர் சிங் கூறினார்.

No comments: