Sunday, 23 October 2011

லண்டன் பல்கலைக்கழகத்தினரால் உயிரினக் கட்டுப்பாட்டு கணணி அறிமுகம்


Biological computer எனப்படும் உயிரினக் கட்டுப்பாட்டு கணணி தொடர்பான ஆய்வு லண்டன் பல்கலைக்கழகத்தினரால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நுண்ணங்கிகள் மற்றும் DNA செயற்பாட்டில் டிஜிட்டல் முறைமையை புகுத்தல் இந்த உயிரினக் கட்டுப்பாட்டு கணனியியலின் நோக்கமாகும்.

எதிர்காலத்தில் இவ்வகையான கணனிகள் உடலினுள் செலுத்தப்பட்டு மனித கலங்களின் செயற்பாடுகளை கண்காணிக்கவும், குறைபாடுகளை நிவர்த்தி செய்யவும் பயன்படலாம்.

இது வெறும் தர்க்க ரீதியான எண்ணம் மட்டுமே, எனிலும் இந்த உயிரினக் கட்டுப்பாட்டு கணனியியல் முழுவதும் பூர்த்தியடைந்துவிட்டால் நாளடைவில் இது சாத்தியமே!

இதுபற்றி ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கையில் தாம் சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும், இதுவரை யாரும் நினைத்து பார்த்திராத அனுகூலங்களை பெற முடியுமெனவும், இதில் முதற்கட்டமாக கடலின் அடியில் வாழும் ஒருவகை மீனினங்களில் இதை பரிசோதிக்க திட்டமிட்டிருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.





  முகப்பு 
Share4          6552 தடவைகள் பார்வையிடப்பட்டுள்ளது

No comments: