iPhone 4S பற்றிய புத்தம் புதிய தகவல்கள் |
iPhone 5 வெளிவருமென எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில் அப்பிளின் தலைமையகமான கியூபேட்டினோவில் iPhone 4S வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு முன்வெளிவந்த iPhone 4 இனைவிடவும் வேகமானதாகவும் சிறந்த நிழற்படக் கருவியைக் கொண்டும் பல நிறங்களைக் காட்டுவதாகவும் இது காணப்படுகின்றது. இதற்கு மனிதர்களின் பேச்சினை விளங்கிக்கொள்ளக் கூடிய தன்மையும் காணப்படுவதுதான் இதன் சிறப்பம்சம். எனினும் இது முற்றுமுழுதாகவே iPhone 4 இனை ஒத்தவடிவமாக உள்ளது. இது முந்தையதைவிடவும் 7 மடங்கு வேகமாக உள்ளது. இதனை ஒக்ரோபர் 7 இலிருந்து பெற்றுக் கொள்ளலாம் அப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. Siri என்ற புதிய அமைப்பில் குரல் செயற்படுத்தி காணப்படுவதால் இதனால் இயற்கையான மனித மொழிகளை அறிந்து கொள்ளக்கூடியவாறு உள்ளது. அதாவது நாம் இன்றைய காலநிலை என்ன என்று கேட்டால் அது ஒன்லைனில் காலநிலை எதிர்வு கூறல் அறிக்கைமூலம் பதிலளிக்கும். iPhone 4S வரமுன்னர் iOS 5 என்பதும் வெளிவரவுள்ளது. இதிலும் பல புதிய அம்சங்கள் காணப்படுகின்றன. இதில் BBM போன்ற செய்திகள் சஞ்சிகைகள் மற்றும் பத்திரிகை மென்பொருட்கள் அடங்கிய ஒரு folder ருவிற்றர் ஒருங்கிணைப்பு போன்றவற்றையும் கொண்டுள்ளது. |
Pages
முக்கிய செய்திகள்
- தொழில் நுட்பம் (16)
- மருத்துவ செய்தி (11)
- முக்கிய செய்திகள் (14)
- முத்துப்பேட்டை செய்திகள் (1)
Sunday, 23 October 2011
iPhone 4S பற்றிய புத்தம் புதிய தகவல்கள்
Labels:
தொழில் நுட்பம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment