Sunday, 23 October 2011

நம்பினால் நம்புங்கள்...லிட்டருக்கு 100கிமீ செல்லும் ஆடி கார்


நம்பினால் நம்புங்கள்...லிட்டருக்கு 100கிமீ செல்லும் ஆடி கார்


!
Audi A3
Ads by Google
Need A Land Survey? 
Norwich Surveyors Dedicated, Accurate & Economical.survey-solutions.co.uk
புதிய எஞ்சின் தொழில்நுட்பம் கொண்ட எஞ்சின் பொருத்தப்பட்டுள்ள ஆடி ஏ-3 செடான் கார் லிட்டருக்கு 100கிமீ மைலேஜ் தருவதாக ஆடி கார் நிறுவனம் கூறுகிறது.

எகிறி வரும் பெட்ரோல், டீசல் விலை காரணமாக கார் வாங்கும்போது முதலில் அதன் மைலேஜ் என்ற விபரங்களைதான் வாடிக்கையாளர்கள் பார்க்கின்றனர். எனவே, மைலேஜ் அஸ்திரத்தை அடிப்படையாக கொண்டு கார்களை அறிமுகப்படுத்துவது வழக்கமாகி வருகிறது.

இந்தியாவின் அதிக மைலேஜ் செல்லும் கார் என்று இண்டிகா இவி2வை டாடா மோட்டார்ஸ் பிரபலப்படுத்தி வருகிறது. இண்டிகா இவி2 ஏஆர்ஏஐ சான்றுபடி லிட்டருக்கு 25 கிமீ மைலேஜ் செல்வதாக டாடா தெரிவிக்கிறது.

இந்த நிலையில், ஷாங்காய் மோட்டார் ஷோவில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட தனது ஏ-3 செடான் கார் லிட்டருக்கு 100 கிமீ மைலேஜ் செல்வதாக ஆடி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த காரில் பொருத்தப்பட்டிருக்கும் 1.4 லிட்டர் எஞ்சின் டீஆக்டிவேஷன் தொழில்நுட்பத்தில் இயங்குவதால் அதிக மைலேஜ் தருவதாக ஆடி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த எஞ்சின் 138 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த காரில் சராசரியாக மணிக்கு 50 கிமீ சென்றால் லிட்டருக்கு 100கிமீ மைலேஜ் கொடுக்கும் என்றும் ஆடி தெரிவித்துள்ளது. அடுத்த ஆண்டு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சந்தையில் இந்த கார் அறிமுகப்படுத்த இருப்பதாக ஆடி தெரிவித்துள்ளது. ஆனால், இந்தியாவில் இந்த கார் அறிமுகப்படுத்தப்படுமா என்பது குறித்து ஆடி எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.
English summary

No comments: