Sunday, 23 October 2011

இந்தியாவில் சாங்யாங் ரெக்ஸ்டான்-II எஸ்யூவி சோதனை ஓட்டங்கள் தீவிரம்


இந்தியாவில் சாங்யாங் ரெக்ஸ்டான்-II எஸ்யூவி சோதனை ஓட்டங்கள் தீவிரம்

.
Ssangyong Rexton-2
Ads by Google
Dell UK - Official Site 
Amazing Dell Laptop Offers With 2nd Gen Intel® Core™. Buy Online!www.Dell.com/uk
ஆப்ரோடு சாகசங்களில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற சாங்யாங் ரெக்ஸ்டான்-II எஸ்யூவியை விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது மஹிந்திரா. இதற்காக, நாடு முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளில் சாங்யாங் ரெக்ஸ்டான்-II எஸ்யூவியின் சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

எஸ்யூவி தயாரிப்பில் சர்வதேச புகழ்பெற்ற தென்கொரியாவின் சாங்யாங் மோட்டார்ஸ் நிறுவனத்தை கடந்த சில மாதங்களுக்கு முன் மஹிந்திரா முழுவதுமாக கையகப்படுத்தியது. மேலும்,சாங்யாங் எஸ்யூவி மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் மஹிந்திரா தெரிவித்தது.

இந்த நிலையில், இந்த ஆண்டு இறுதிக்குள் 5 பேர் பயணம் செய்யும் வசதிகொண்ட சாங்யாங் கொரண்டூ மினி எஸ்யூவியை இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த மினி எஸ்யூவி 2.2 லிட்டர் டர்போ டீசல் எஞ்சின் கொண்டதாக வருகிறது. இந்த எஞ்சின் 175 பிஎச்பி ஆற்றைலை வாரி வழங்க வல்லது.

இதைத்தொடர்ந்து, அடுத்த ஆண்டு துவக்கத்தில் சாங்யாங் ரெக்ஸ்டான்-II எஸ்யூவியை அறிமுகம் செய்யவும் மஹிந்திரா திட்டமிட்டுள்ளது. இதற்காக, சாங்யாங் ரெக்ஸ்டான் எஸ்யூவியின் சோதனை ஓட்டங்கள் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த புதிய எஸ்யூவி 2.7 லிட்டர் காமன் ரயில் டீசல் எஞ்சின் கொண்டதாக வருகிறது. இந்த எஞ்சின் 165 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும். 7 பேர் பயணம் செய்யும் வசதிகொண்டதாக இருக்கும். மேலும், ஆல்வீல் டிரைவ் சிஸ்டம் இதில் ஸ்டான்டர்டு அம்சமாக இருக்கும்.

மெர்சிடிஸ் எம்-கிளாஸ் எஸ்யூவி பிளாட்பார்மில் வடிவமைக்கப்பட்ட இந்த எஸ்யூவிக்கு 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்டதாக இருக்கும். இந்த கியர் பாக்ஸ் மெர்சிடிஸ் பென்ஸ் வடிவமைத்து கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: