வரும் டிசம்பரில் புத்தம் புது பல்சர் அறிமுகம்: ராகுல் பஜாஜ்
Ads by Google
Building Survey
Always Reliable-Always Competitive. Expert Land Surveyors.survey-solutions.co.uk

"வரும் டிசம்பர் துவக்கத்தில் புத்தம் புது பல்சர் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது," என்று பஜாஜ் ஆட்டோ நிர்வாக இயக்குனர் ராகுல் பஜாஜ் கூறினார்.
பல்சர் பைக் அறிமுகப்படுத்தப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி புதிய பைக்கை அறிமுகப்படுத்த பஜாஜ் ஆட்டோ திட்டமிட்டுள்ளது. இந்திய சந்தையின் வெற்றிகரமான மாடலாக பல்சர் வலம் வரும் நிலையில், புதிய பல்சர் குறித்த இணையதளங்களில் வெளியான புதிய பல்சர் புகைப்படங்கள் பெரும் ஆவலை தூண்டியுள்ளது.
இந்த நிலையில், மும்பையில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் பஜாஜ் ஆட்டோ நிர்வாக இயக்குனர் ராகுல் பஜாஜ் மற்றும் சர்வதேச வர்த்தகப் பிரிவு தலைவர் ராகேஷ் ஷர்மா ஆகியோர் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய ராகுல் பஜாஜ் கூறியதாவது:
"கடந்த 2001ம் ஆண்டு நவம்பர் மாதம் பல்சரை அறிமுகம் செய்தோம். அறிமுகம் செய்யப்பட்டு 10 ஆண்டுகள் ஆன நிலையில், தற்போது நாங்கள் புதிய பல்சரை அறிமுகப்படுத்த 100 சதவீதம் தயார் நிலையில் உள்ளோம்.
உலகின் இதுவரை எந்த பைக்குகளிலும் இல்லாத புதிய எஞ்சின் தொழில்நுட்பத்துடன் புதிய பல்சரை வடிவமைத்துள்ளோம். டிடிஎஸ்ஐ தொழில்நுட்பத்திற்கு பின்னர் இந்த புதிய எஞ்சின் தொழில்நுட்பம் உண்மையிலேயே அடுத்த அத்தியாயத்தில் அடியெடுத்து வைக்கும் வகையில் இருக்கும்," என்றார்.
வரும் டிசம்பரில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள புதிய பல்சர் அடுத்த ஆண்டு விற்பனைக்கு கொண்டுவரப்படும் என்று பஜாஜ் ஆட்டோ வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

[ கருத்தை எழுதுங்கள் ] [ நண்பருக்கு அனுப்ப ]
English summary
No comments:
Post a Comment