Pages
முக்கிய செய்திகள்
- தொழில் நுட்பம் (16)
- மருத்துவ செய்தி (11)
- முக்கிய செய்திகள் (14)
- முத்துப்பேட்டை செய்திகள் (1)
Thursday, 8 November 2012
Thursday, 15 December 2011
நாலு டம்ளர் தண்ணீர் நோய்களை விரட்டும
நாலு டம்ளர் தண்ணீர் நோய்களை விரட்டும்!
மனித உடலில் மூன்றில் இரண்டு பங்கு தண்ணீர் உள்ளது. இந்த தண்ணீர் செல்களுக்கு ஆக்ஸிஜனை கடத்தும் ஆக்ஸிகரனியாக செயல்படுகிறது. நுரையீரலுக்கு சுத்தமான காற்றை அனுப்ப உதவுகிறது. உடல் வெப்பநிலையை சீராக தக்கவைக்கிறது. மூட்டுக்களின் வழவழப்புத்தன்மையை பாதுகாக்கிறது.
தலை முதல் கால் வரை ஒவ்வொரு செல்லும் தண்ணீரின் தேவையை உணர்ந்துள்ளன. மனித மூளையின் செயல்பாட்டிற்கு 90 சதவிகிதம் தண்ணீர் தேவையுள்ளது. எனவே உடலில் நீர்ச்சத்து குறைய குறைய மூளையின் செயல்பாடு குறையும். இதனையடுத்து தலைவலி உள்ளிட்ட நோய்கள் ஒவ்வொன்றாக வர ஆரம்பிக்கும். எனவே தண்ணீரை நாம் நோய் தீர்க்கும் மருந்தாகவும் பயன்படுத்தலாம்.
கலையில் கண்விழித்ததும் பல் துலக்கும் முன்பே 4 டம்ளர் தண்ணீர் அருந்தவேண்டும். பின்னர் பல் துலக்கி வாய் சுத்தம் செய்த பின்னர் 45 நிமிஷங்களுக்கு உணவோ, நீராகாரம் எதுவுமே உட்கொள்ளக் கூடாது. 45 நிமிடங்களுக்குப் பின் வழக்கமான உணவை உட்கொள்ளலாம்.
தண்ணீர் மருத்துவம்
எந்த நோய்க்கு எத்தனை நாட்கள் இந்த முறையை பின்பற்ற வேண்டும் என்ற விபரங்களை கீழே காணலாம்:
உயர் இரத்த அழுத்தம் - 30 நாட்கள், வாய்வுக் கோளாறுகள் - 10 நாட்கள் சலரோகம் அல்லது சர்க்கரை வியாதி - 30 நாட்கள், மலச்சிக்கல் (கான்ஸிடிபேஷண்ட்) - 10 நாட்கள், புற்றுநோய் - 180 நாட்கள், காச நோய் - 90 நாட்கள். ஆத்திரட்டிஸ் நோயாளிகள் முதல் வாரம் 3 நாட்களும், இரண்டாவது வாரத்திலிருந்து தினமும் இம் முறையினைப் பின்பற்ற வேண்டும். இந்த வழியில் பின்பற்றினால் அனைத்துநோய்களும் முற்றிலும் குணமாகும் அல்லது நோயானது மேலும் கடுமையாகாமல் கட்டுப்படும் என்று ஜப்பானிய மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
பக்கவிளைவு கிடையாது
பக்க விளைவுகள் எதுவுமில்லாத மருத்துவமுறை இது, எனினும் நீர் அதிகமாக உட்கொள்வதால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டி வரும். ஆனாலும் இந்த முறையை நமது அன்றாட கடமைகளில் ஒன்றாகப் பின்பற்றுவது மிகவும் நன்மை தரும் என்றே சொல்ல வேண்டும். நீர் அருந்தி ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருங்கள்.
முதியோர் அல்லது நோயாளிகள் அல்லது 4 டம்ளர் நீரை எடுத்த எடுப்பிலேயே அருந்த முடியாதவர்கள் ஆரம்பத்தில் கொஞ்சம் கொஞ்சமாக நீர் உட்கொண்டு நாளடைவில் 4 டம்ளர் அளவு நீர் அருந்த பழகலாம். மேற்குறிப்பிட்ட முறையை பின்பற்றும் நோயாளிகள் தமது நோய் நீங்கி சுகமடையலாம். மற்றவர்கள் ஆரோக்கியமான வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழலாம்.
தண்ணீர் குடித்தால் மட்டுமே 'பக்க விளைவு' வராது -மாறாக 'தண்ணி' அடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு 'பக்கா'வான விளைவுகளை சந்திக்க நேரிடும். எனவே நிறைய தண்ணீர் குடிங்க, அந்தத் 'தண்ணி'யை மறந்துடுங்க...!

Labels:
மருத்துவ செய்தி
Monday, 21 November 2011
Monday, 7 November 2011
மூட்டுவலிக்குரிய மருத்துவக் குறிப்புக்கள்
மூட்டுவலிக்குரிய மருத்துவக் குறிப்புக்கள்
ஒருவருக்கு முதுமை வந்துவிட்டால் அங்கே மூட்டு வலியும் சேர்ந்து ஆரம்பித்த விடுகின்றது.
இது உடம்பில் இடுப்புமூட்டு, கால்மூட்டு, தோள்பட்டை, கழுத்துப் போன்ற பகுதிகளில் இந்த வலியை உணர முடியும்.
இந்த மூட்டு வலிக்கு முதன்மைக் காரணமாக முதுமை இருந்தாலும் உடலுக்கு ஒத்துக் கொள்ளாத உணவுகளை அடிக்கடி சாப்பிடுவது, அதிக குளிர்ச்சி மற்றும் வெப்பநிலை, அதிக நேரம் நடத்தல் அல்லது அதிக நிறை கொண்ட பொருட்களைபத் தூக்குதல், அதிகமாக உடற்பயிற்ச்சி செய்தல், அல்லது எந்தவித உடற்பயிற்சியும் செய்யாமல் இருப்பது நீண்ட நாட்களாக உடல் நோய்களால் பாதிக்கப்பட்டு இருப்பது, எலும்பு மூட்டுக்களில் ரத்தம் உறைந்து போய் காணப்படுவது ஆகியவையும் பிற காரணங்களாக அமைகின்றன.
நீங்களும் மூட்டு வலியால் அவதிப்படுபவரா? அந்த அவஸ்தையில் இருந்து தப்பிக்க வேண்டுமா அதற்குச் சிறந்த மருத்துவக் குறிப்புக்கள்.
கரட், பீட்ரூட் ஆகியவற்றை பச்சையாக உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
காய்கறிச் சூப் அசைவ சூப் அடிக்கடி சாப்பிடுங்கள்.
எந்த வாழைப்பழமாக இருந்தாலும் அதை தினமும் சாப்பிடும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளவும்.
கல்சியம் அதிகம் உள்ள பால் சார்ந்த பொருட்கள் மற்றும் மீன் உணவை அடிக்கடி எடுத்துக் கொள்ளங்கள்.
நடைப்பயிற்சி அவசியமான ஒன்றுதான் ஆனால் அது அளவோடுதான் இருக்க வேண்டும். அதேபோல் அளவான உடற்பயிற்சி செய்வதும் நன்மை தரும்.
காரம் நிறைந்த எண்ணெய்யில் வறுத்த உணவுகள், போப்பி, பால் சாப்பிடுவதை முடிந்தளவு தவிருங்கள்.
உடல் நலத்தைக் காக்க அக்கறை எடுப்பது போல உங்கள் மனதையும் சுகமாய் வைத்திருக்க முயன்றிடுங்கள்.
அதாவது, மனதில் தேவையில்லாத விஷயங்களை போட்டுக் குழப்பிக் கொள்ள வேண்டாம். தேவையில்லாமல் டென்ஷன் ஆகவேண்டாம்.
இவற்றை பின்பற்றிக் கொண்டு வந்தால் உங்களுக்கு வர எட்டிப்பார்க்கும் மூட்டுவலி தானாக மறைந்துவிடும்.

ஆரோக்கியமான வாழ்விற்கு காலை உணவு
ஆரோக்கியமான வாழ்விற்கு காலை உணவு
ஆரோக்கியமான வாழ்விற்கு காலை உணவு மிகவும் முக்கியமானது என்று மருத்துவ ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
இது குறித்து பிரிட்டனின் சிக்ரிட் கிப்சன் தலைமையிலான குழு ஆய்வுகளை நடத்தியுள்ளன.
இந்த ஆய்வு முடிவு பற்றித் தெரிவித்துள்ள குழுவின் அறிக்கையில் மற்ற உணவு மற்றும் அதிலிருந்து கிடைக்கும் சத்துகள் ஆகியவற்றை காலை உணவு தான் நிர்ணயிக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்கள்.
பருப்பு வகைகள் மற்றும் பால் ஆகியவற்றைக் காலையில் உட்கொண்டு வருவதனால் உடலுக்கு நோய் இல்லாமல் பாதுகாக்கின்றது எனக் கூறப்படுகின்றது.
19 முதல் 64 வயது வரையில் உள்ளவர்களின் 12 ஆயிரத்து 68 மருத்துவ ஆவணங்களைப் ஆய்வு செய்தே இந்த முடிவுக்கு மருத்துவக் குழு வந்திருக்கிறது.
இந்த மருத்துவக்குழுவின் அறிக்கையின் படி, பெரும் பாலானவர்கள் திட உணவுக்கு முன்பாக கோப்பி அல்லது தேநீர் போன்றவற்றை அருந்த விரும்புகிறார்கள் என்று தெரிய வந்துள்ளது.
பால் மற்றும் பருப்பு வகைகள் கல்சியம், நார்ச்சத்து, புரதம் மற்றும் கார்போஹைட்ரேட் ஆகியவற்றைத் தரும் என்பதால் அவற்றை எடுத்துக் கொள்வதே நல்லது என்கிறார்கள் மருத்துவர்கள்.

கொக்கா கோலா குடிப்பவரா நீங்கள் ? உங்களுக்கான எச்சரிக்கை இது !
கொக்கா கோலா குடிப்பவரா நீங்கள் ? உங்களுக்கான எச்சரிக்கை இது !
கொக்கா கோலா பாணம் (Coca Cola) சர்வதேச அளவில் பிரபல்யமான அனைத்து நாட்டவர்களும் அருந்தக்கூடிய ஒரு குளிர்பாணம் என்பது யாவரும் அறிந்த உண்மை. ஆனால் அதில் சுவைக்காக பல இரசாயன பதார்த்தங்கள் உள்ளடக்கபட்டுள்ளமை அனேகமானவர்களுக்கு தெரிவதில்லை.
அது அவர்களுக்கு மட்டுமே தெரிந்த கலவை இரகசியம். ஆனால் இந்த கொக்கா கோலா பாணத்தில் உள்ள இராசாயண பதார்த்தங்களை சோதிக்கும் நடவடிக்கை ஒன்றையே நாம் இன்று வழங்குகிறோம். காணொளியை கவனமாக பாருங்கள்.
கொகோ கோலா பாணத்தினை ஒருவர் கிளாசில் ஊற்றி அதனுள் ஒரு முட்டையை இடுகிறார். இதனை ஒரு வருடத்திற்கு அப்படியே பத்திரப்படுத்தி வைக்கப்படுகிறது. பின்னர் சரியாக ஒரு வருடத்திற்கு பிறகு கோகோ கோலா பாணத்திற்குள் இட்டு வைத்திருந்த முட்டை வெளியே எடுக்கப்படுகிறது. என்ன ஒரு அதிர்ச்சி …

வழி காட்ட வந்து விட்டது மேப் மை இண்டியா நவம்பர் 06,2011,07:34
வழி காட்ட வந்து விட்டது மேப் மை இண்டியா
நவம்பர் 06,2011,07:34
45 வயசுல என்னையும் மதிச்சு ஒரு இன்டர்வியூக்கு கூப்பிட்டானுங்க.வழி தெரியாம... அந்த கம்பெனி இருக்கிற ஏரியாவை தவிர எல்லா இடத்தையும் நீ சுத்தி காட்டினதை இப்போ நினைச்சாலும் அழுகை அழுகையா வருதுய்யா! இந்த மேப் மை இண்டியாவை வண்டியில் மாட்டிக்கோ, இனிமே வர்றவங்களையாவது ஒழுங்கா கூட்டிட்டு போய் விடு.
Labels:
தொழில் நுட்பம்
Friday, 28 October 2011
முத்துப்பேட்டையில் வீடு இடிந்து விழுந்ததில் சிக்கிய கொத்தனார் கவலைக்கிடம்!
முத்துப்பேட்டை,அக்டோபர் 28 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை குட்டியார் பள்ளி தெருவில் ஷபீகா ஜிவல்லரி உரிமையாளர் ஜனாப்.ஹாஜமைதீன் அவர்கள் தனது குட்டியார் பள்ளி வாசல் எதிர்புறத்தில் உள்ள அவரது வீட்டை இடித்து புது வீடு கட்டி வருகிறார். இந்நிலையில் அப்போது கொத்தனார் வேலைகள் மும்புரமாக நடைபெற்று வந்த நிலையில் பக்கத்து வீட்டில் உள்ள மது சுவர் தீடிரென்று இடிந்து பணியாட்கள் மேலே விழுந்தது. இது குறித்து முத்துப்பேட்டை தீயணைப்பு துறைனருக்கு தகவல் தெருவிக்கப் பட்டன . தகவல் அறிந்து தீயணைப்பு நிலைய அலுவலர் திரு.கு.வாசு, திரு.ராஜேந்திரன் மற்றும் பணியாட்களுடன் உடனே வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த இடத்தில் பணியாற்றிய திருமதி.நாடிமுத்து வயது 35 , தமிழரசு வயது 28 , திரு சுரேஷ் வயது 30 ஆகியோர் பலத்த காயம் ஏற்பட்டு அரசு மருத்துவமையில் சேர்க்கப்பட்டனர். அதில் சுரேஷ் என்பவரது கை துண்டாகியதால், அவரை மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் அறிந்த உடனே முத்துப்பேட்டையின் பேரூராட்சி தலைவர் திரு.கோ.அருணாச்சலம் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு இதை அரசு கவனத்திற்கு கொண்டு சென்றார்,உடன் அ.தி.மு.க.நகர துணைத் செயலாளர் ஜனாப்.முஹம்மது முஹைதீன் அவர்கள் உடனிருந்தார். மேலும் இந்த சம்பவம் குறித்து முத்துப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Labels:
முத்துப்பேட்டை செய்திகள்
Sunday, 23 October 2011
iPhone 4S பற்றிய புத்தம் புதிய தகவல்கள்
iPhone 4S பற்றிய புத்தம் புதிய தகவல்கள் |
iPhone 5 வெளிவருமென எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில் அப்பிளின் தலைமையகமான கியூபேட்டினோவில் iPhone 4S வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு முன்வெளிவந்த iPhone 4 இனைவிடவும் வேகமானதாகவும் சிறந்த நிழற்படக் கருவியைக் கொண்டும் பல நிறங்களைக் காட்டுவதாகவும் இது காணப்படுகின்றது. இதற்கு மனிதர்களின் பேச்சினை விளங்கிக்கொள்ளக் கூடிய தன்மையும் காணப்படுவதுதான் இதன் சிறப்பம்சம். எனினும் இது முற்றுமுழுதாகவே iPhone 4 இனை ஒத்தவடிவமாக உள்ளது. இது முந்தையதைவிடவும் 7 மடங்கு வேகமாக உள்ளது. இதனை ஒக்ரோபர் 7 இலிருந்து பெற்றுக் கொள்ளலாம் அப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. Siri என்ற புதிய அமைப்பில் குரல் செயற்படுத்தி காணப்படுவதால் இதனால் இயற்கையான மனித மொழிகளை அறிந்து கொள்ளக்கூடியவாறு உள்ளது. அதாவது நாம் இன்றைய காலநிலை என்ன என்று கேட்டால் அது ஒன்லைனில் காலநிலை எதிர்வு கூறல் அறிக்கைமூலம் பதிலளிக்கும். iPhone 4S வரமுன்னர் iOS 5 என்பதும் வெளிவரவுள்ளது. இதிலும் பல புதிய அம்சங்கள் காணப்படுகின்றன. இதில் BBM போன்ற செய்திகள் சஞ்சிகைகள் மற்றும் பத்திரிகை மென்பொருட்கள் அடங்கிய ஒரு folder ருவிற்றர் ஒருங்கிணைப்பு போன்றவற்றையும் கொண்டுள்ளது. |
Labels:
தொழில் நுட்பம்
மிகப் பெரிய கோப்புகளை அனுப்புவதற்கு
மிகப் பெரிய கோப்புகளை அனுப்புவதற்கு |
ஒரு பெரிய கோப்புக்களை மின்னஞ்சலில் அனுப்ப மிகவும் தடுமாறுகிறோம். கட்டணம் செலுத்தாமல் yahoo, gmail, hotmail போன்றவை 10MB க்கு மேல் பொதுவாக அனுமதிப்பதில்லை. கட்டணம் செலுத்தாமலேயே SendTool என்ற இணையதளத்தின் மூலம் மிகப் பெரிய கோப்புகளை அனுப்பலாம். SendTool மூலம் உங்கள் கோப்புகளையும்(File) படங்களையும் பதிவேற்றம் செய்து விட்டு கிடைக்கும் தரவிறக்க சுட்டிகளை(Download link) மட்டும் நண்பருக்கு மின்னஞ்சலில் அனுப்பினால் போதும். இங்கு கடவுச்சொல் அமைத்துக் கொள்ளும் வசதியும் உண்டு. |
Labels:
தொழில் நுட்பம்
கணணியில் சிக்கிக்கொண்ட சீடியை வெளியே எடுப்பதற்கு
கணணியில் சிக்கிக்கொண்ட சீடியை வெளியே எடுப்பதற்கு |
நீங்கள் அடிக்கடி சீடி பயன்படுத்துபவராக இருந்தால் இந்த சூழ்நிலையில் நீங்கள் என்றாவது சிக்கி இருப்பீர்கள். ஆம் உங்கள் சீடி கணணியின் சீடி டிரைவில் இருந்து வெளியே வராமல் உங்களை மோசமான நிலையில் சிக்க வைக்கும். எத்தனை முறை சீடி டிரைவின் எஜெக்ட் பட்டனை அழுத்தினாலும் அப்படியே டிரைவ் வெளியே வராமல் இருக்கும். இந்த சூழ்நிலையில் என்ன செய்தால் சீடி டிரைவ் திறக்கப்பட்டு சீடி வெளியே எடுக்கும்படி கிடைக்கும் என்பதனைப் பார்க்கலாம். முதலில் சீடி டிரைவ் திறக்கப்பட்டு சிடி இருக்கும் அந்த பிளாஸ்டிக் ட்ரே வெளியே நீண்டு வரவில்லை என்றால் கவலைப்படாதீர்கள். இந்த சூழ்நிலையை சமாளித்து சீடியை கீழ்க்காணும் வழிகளைக் கையாண்டு வெளியே எடுக்கலாம். வழி 1: மை கம்ப்யூட்டர் ஐகானில் கிளிக் செய்திடுங்கள். உங்கள் டெஸ்க்டொப்பில் இந்த ஐகான் இல்லை என்றால் நிச்சயம் ஸ்டார்ட் மெனுவில் இருக்கும். இதனைத் திறந்தவுடன் உங்கள் கணணியின் டிரைவ்கள் அனைத்தும் காட்டப்படும். இதில் Devices with removable stroage என்ற பிரிவில் சீடியின் படத்துடன் ஒரு ஐகான் இருக்கும். அல்லது சிக்கிக் கொண்ட சீடி ஏதேனும் ஒரு நிறுவனம் தந்துள்ள பேக்கேஜ் என்றால் நிறுவனம் தந்துள்ள ஐகானுடன் அந்த டிரைவ் காட்டப்படும். இதன் மீது ரைட் கிளிக் செய்திடுங்கள். கிடைக்கும் மெனுவில் Eject என்ற பிரிவில் கிளிக் செய்திடுங்கள். உங்கள் சீடி டிரைவில் உள்ள எஜெக்ட் பட்டன் தேய்ந்து போய் நீங்கள் அழுத்துகையில் அதன் செயல்பாடு மேற்கொள்ளப்படாத சூழ்நிலையில் இந்த வழி செயல்படும். இதற்கும் சீடி டிரைவ் திறக்கவில்லை என்றால் அடுத்த வழியைப் பார்க்கலாம். வழி 2: பேப்பர் கிளிப் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். (ஜெம் கிளிப் என்றும் சிலர் இதனை அழைக்கின்றனர்) அதன் ஒரு முனையை பிரித்து நீட்டுங்கள். சீடி டிரைவின் எஜெக்ட் பட்டன் அருகே சிறிய துளை இருப்பதைக் காணுங்கள். நிச்சயம் இதுவரை நீங்கள் இதனைக் கண்டு கொள்ளாமல் இருந்திருப்பீர்கள். இப்போது நிச்சயம் இதன் உதவி வேண்டியதிருக்கிறது. இந்த துளையில் மெதுவாக பிரித்த பேப்பர் கிளிப்பின் சிறிய கம்பியை உள்ளே செலுத்தவும். சிறிது உள்ளே செலுத்தியவுடன் அது ஒரு இடத்திற்கு மேல் செல்லாது. இந்த இடத்தில் சிறிய அளவில், மிகச் சிறிய அளவில் அழுத்தம் கொடுக்கவும். எஜெக்ட் செய்யும் போது இயங்கும் இன்டர்னல் லாக் உள்ள இடத்தில் இந்த அழுத்தம் கிடைப்பதால் டிரைவின் கதவு திறக்கும். உடனே சீடியை எடுத்துவிட்டு மீண்டும் டிரைவின் கதவினை மூடவும். மறக்காமல் பேப்பர் கிளிப் பின்னை எடுத்துவிடவும். ஏனென்றால் பலர் சீடி வெளியே வந்த சந்தோஷத்தில் பேப்பர் கிளிப்பைச் செருகியபடியே வைத்துவிடுவார்கள். |
Labels:
தொழில் நுட்பம்
குழந்தைகளை சாப்பிடச் சொல்லி தொந்தரவு செய்ய வேண்டாம்: ஆய்வாளர்கள் வலியுறுத்தல்
குழந்தைகளை சாப்பிடச் சொல்லி தொந்தரவு செய்ய வேண்டாம்: ஆய்வாளர்கள் வலியுறுத்தல் |
“இந்த காய் சாப்பிடு, அந்த காய் சாப்பிடு’’ என்று குழந்தைகளை அளவுக்கு மீறி தொந்தரவு செய்தால் அவர்கள் சாப்பிடும் அளவு குறைந்துவிடும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். சொக்லேட், ஐஸ்கிரீம் எவ்வளவு கொடுத்தாலும் பிள்ளைகள் சாப்பிடுவார்கள். சோறு என்றாலே எரிச்சலாவார்கள். நாலு வாய் சோற்றை அரை மணி நேரமாக சாப்பிடுவது இதன் வெளிப்பாடு. இதுபற்றி அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநில பல்கலைக்கழகம் மற்றும் அப்பலேச்சியன் பல்கலைக்கழக உளவியல் துறை பேராசிரியர்கள் இணைந்து சமீபத்தில் ஆய்வு நடத்தினர். 4 வயது குழந்தைகளை வைத்து இந்த ஆய்வு நடத்தப்பட்டது. ஆராய்ச்சி முடிவில் கூறப்பட்டிருப்பதாவது: அதிக சத்துள்ள காய்கறிகள், பழங்கள் சாப்பிட வேண்டும் என்ற ஆர்வம் குழந்தைகளுக்கு இயல்பாகவே உண்டு. ஆனால் “இதை சாப்பிடு, அதை சாப்பிடு. இதில் நிறைய சத்து இருக்கிறது” என்று பெற்றோர் திரும்ப திரும்ப சொல்லும் போது அந்த உணவு மீது அவர்களுக்கு வெறுப்பு வருகிறது. அதை தவிர்க்க ஆரம்பிக்கின்றனர். ஒரு காய், பழம் அல்லது உணவு பொருளை குழந்தைகளிடம் கொடுத்து சாப்பிடு, சாப்பிடு என்று பல முறை கட்டாயப்படுத்துவதைவிட அவர்கள் போக்கிலேயே விட்டுவிடுவது நல்லது. இதில் ஏதோ சத்து அல்லது ருசி இருப்பது போல தெரிகிறது. சாப்பிட்டுத்தான் பார்க்கலாமே என்ற முடிவுக்கு வந்து அவர்களாகவே சாப்பிடுவார்கள். |
Labels:
முக்கிய செய்திகள்
வேலை தேடுபவர்களுக்கு உதவும் பயனுள்ள இணையம்
வேலை தேடுபவர்களுக்கு உதவும் பயனுள்ள இணையம் |
வேலை தேடுபவர்களுக்கு பயோடேட்டாவின் முக்கியத்துவம் நன்றாகவே தெரியும். நல்ல வேலை கிடைப்பது நல்ல பயோடேட்டாவை சார்ந்தே இருக்கிறது. பயோடேட்டா பளிச் என்று பக்காவாக இருந்தால் வேலை கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகம் என்பதும் வேலை தேடும் எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். ஆனால் பலருக்கும் தெரியாத விஷயம் பக்காவான பயோடேட்டாவை தயாரிப்பது எப்படி என்பது தான். அதிலும் புதிதாக வேலை தேடுபவர்களுக்கு இந்த குழப்பம் அதிகமாகவே இருக்கும். நல்ல பயோடேட்டாவிக்கு என்று எழுதப்படாத விதிகள் எதுவும் இல்லாவிட்டாலும் பலவித குறிப்புகளும் ஆலோசனைகளும் கொட்டிக்கிடக்கின்றன. இவை மேலும் குழப்பலாம். பயோடேட்டா விரிவாக இருக்க வேண்டும் என்று சொல்லப்படுவதை தவறாக புரிந்து கொண்டு பக்கம் பக்கமாக பயோடேட்டாவை தயார் செய்தால் அது எதிர்பார்த்த பலனை தர வாய்ப்பில்லை. அதே போல கூடுதல் அம்சங்கள் இருக்க வேண்டும் என்பதற்காக எதையாவது சேர்த்து கொண்டால் பயோடேட்டா பயோடேட்டாவாக இருக்காது. பயோடேட்டா நிறுவன அதிகாரியை கவரும் வகையில் இருக்க வேண்டும் என்பதற்காக அதில் அலங்காரங்களையும் பொய்யான தகவல்களையும் இடம்பெற வைக்க வேண்டியதில்லை. பக்காவான, செயல்திறன் மிக்க பயோடேட்டாவை உருவாக்கி கொள்ள உதவுவதாக கூறும் இந்த தளம் மிக அழகாக அதனை செய்தும் தருகிறது. அதையும் சுலபமாக, உடனடியாக செய்து தருகிறது. இந்த தளத்திற்கு வந்த பின் ஒரு நல்ல பயோடேட்டா எப்படி இருக்க வேண்டும் என்ற கவலையோ குழப்பமோ தேவையில்லை. அதை இந்த தளம் பார்த்து கொள்கிறது. வேலை தேடுபவரின் நோக்கம், கல்வி தகுதி, பணி அனுபவம் போன்ற விவரங்களை சமர்பித்தால் போதும் அதை கொண்டு அழகான பயோடேட்டா ரெடியாகி விடுகிறது. பயோடேட்டாக்களுக்கு என்று நாலைந்து வகையான பொதுவான டெம்ப்லேட்கள் இருக்கின்றன. அவற்றில் விருப்பமானதை தேர்வு செய்து கொள்ளலாம். அதற்கு முன்பாக பாயோடேட்டாக்களின் மாதிரியை பார்த்து கொள்ள்லாம். துறைவாரியாக சம்பிக்கப்பட்ட பயோடேட்டாக்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. எல்லாமே ஒரே பக்கம் மட்டுமே இருக்கின்றன. ஆனால் மூர்த்தி தான சிறியதே தவிர கீர்த்தி பெரிது தான். அந்த ஒரு பக்கத்திலேயே வேலைக்கு விண்ணபிப்பவர் பற்றி தெரியவேண்டிய அனைத்து விவரங்களும் வந்து விடுகின்றன. பயோடேட்டா என்பது வேலை தேடுபவரின் அறிமுக அட்டை என்றால் இந்த தளம் உருவாக்கி தருபவை அதை கச்சிதமாக நிறைவேற்றுகின்றன. ஆக பக்காவான பயோடேட்டாவை வெகு சுலபமாக இந்த தளத்தின் மூலம் உருவாக்கி கொண்டு விடலாம். இது முதல் படி தான். இந்த பக்காவான பயோடேட்டாவை அப்படியே அச்சிட்டு கொள்ளலாம். பிடிஎப் கோப்பாக மாற்றிக்கொள்ளலாம். இணையத்தின் மூலம் வேலைக்கு விண்ணப்பிக்கலாம். பேஸ்புக் மற்றும் டிவிட்டர் போன்ற சமூக வலைப்பின்னல் தளங்கள் மூலம் பகிர்ந்து கொள்ளலாம். பயோடேட்டாக்கள் நிறுவனங்களால் எத்தனை முறை பார்க்கப்பட்டுள்ளன போன்ற விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம். வேலை வாய்ப்புக்கான பயனுள்ள குறிப்புகளும் வழங்கப்படும். பொருத்தமான வேலை வாய்ப்பு பற்றிய தகவலும் தெரிவிக்கும் வசதியும் இருக்கிறது. வேலை தேடுபவர்களுக்கு கைகொடுக்க கூடிய தளம் என்பதில் சந்தேகமில்லை. |
Labels:
முக்கிய செய்திகள்
குழந்தைகளுக்கான இணையதளங்கள்
குழந்தைகளுக்கான இணையதளங்கள் |
தங்களது குழந்தைகளை நல்ல பண்புகளுடன் உருவாக்குவதே இன்றைய பெற்றோர்களின் சிறந்த கனவாக உள்ளது. நம் வாழ்க்கையுடன் ஒன்றிவிட்ட கணணியும், இணையமும் இதற்குப் பல வழிகளைத் தருகிறது. ஒரு நல்ல கணணியும், அதற்கான பிராட்பேண்ட் இணைப்பும் இருந்தால் குழந்தைகள் தங்கள் நேரத்தை நல்ல வழிகளில் பயன்படுத்த பெற்றோர்கள் துணைபுரியலாம். குழந்தைகளுக்கு விளையாட்டு என்பது அவர்களின் இயற்கையோடு இணைந்த ஒன்று. அதன் வழியாகவே அவர்களின் மன வளர்ச்சியை நல்ல முறையில் உருவாக்கலாம். உலக விஷயங்களைக் கற்றுக் கொடுக்கலாம். அதற்கென உள்ள பல இணையதளங்கள் உள்ளன. 1. கல்வி விளையாட்டுக்கள், வேடிக்கையான கேம்ஸ், ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்குமான தகவல்கள், கலை அம்சம் நிறைந்த பலவற்றிற்கு 20 ஆயிரத்திற்கு மேலான இணைய தொடர்புகள், வண்ணம் தீட்டி பழக தளங்கள், கணக்கு பழக பயிற்சிகள் மற்றும் தரவிறக்கம் செய்து வைத்து விளையாட கேம்ஸ் என அனைத்து வகைகளிலும் குழந்தைகளுக்கான இணையக் களஞ்சியமாக இயங்குகிறது http://www.links4kids.co.uk/ என்ற முகவரியில் உள்ள தளம். 2. நூற்றுக்கணக்கில் இன்டர்நெட் இணைப்பில் விளையாட கேம்ஸ், கார்டூன், மூவி கிளிப்கள், மியூசிக் வீடியோ, புதிர்கள், கற்பனைத் திறனை ஊக்கப்படுத்தும் செயல்பாடுகள், பக்கங்களுக்குக் கலர் தீட்டுதல், பாதுகாப்பான வழிகளில் இணையத் தேடல் என வேடிக்கை விளையாட்டுக்களையும் கல்வி கற்றலையும் இணைத்து தருகிறது http://alfy.com/ என்ற முகவரியில் உள்ள இணைய தளம். 3. http://www.surfnetkids.com/ என்ற தளத்தில் பல்வேறு வித்தியாசமான கேம்ஸ், வேடிக்கை விளையாட்டுக்கள், குழந்தைகளுக்கான தகவல்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் குழந்தைகளுக்குக் கற்றுத் தர விரும்பும் விஷயங்கள், நினைவாற்றலை வளர்க்கும் விளையாட்டுக்கள் எனப் பல வகைகளில் குழந்தைகளுக்கான அனைத்து விஷயங்களும் வித்தியாசமான முறையில் தரப்பட்டுள்ளன. 4.குழந்தைகளுக்கு கணக்குகளைத் தந்து அவர்களின் சிந்திக்கும் திறனை வளர்க்கும் தளமாக விளங்குகிறது http://www.coolmath4kids.com/ உலக அளவில் இது சிறந்த தளம் என்ற பாராட்டினைப் பல அமைப்புகளில் இருந்து பெற்றது. குழந்தைகளுக்கு கூட்டல், கழித்தலில் தொடங்கி அல்ஜிப்ரா, பின்னங்கள், டெசிமல் கணக்குகள் என கணக்கின் அடிப்படையையும் அதன் தொடர்பான பிறவற்றையும் கற்றுத்தரும் பல தளங்கள் இணையத்தில் உள்ளன. இவை அனைத்தும் கணக்கியலை விளையாட்டுக்கள் மூலமும் புதிர்கள் மூலமும் கற்றுத் தருகின்றன. |
Labels:
முக்கிய செய்திகள்
இணையத்தில் வேகமாக தரவிறக்கம் செய்வதற்கு
இணையத்தில் வேகமாக தரவிறக்கம் செய்வதற்கு நாம் இணையத்தில் பொதுவாக தரவிறக்கம் செய்யும் வேகத்தை விட Internet Download Manager வழியாக தரவிறக்கம் செய்யும் போது 5 மடங்கு வேகமாக தரவிறக்கம் நடைபெறுகிறது.
இது ஒரு கட்டண மென்பொருள். இதன் சந்தை மதிப்பு $25 ஆகும். இதன் புதிய பதிப்பை கிராக் செய்து Full Version-க தரவிறக்கலாம். இதன் IDM ஜ தரவிறக்கம் செய்து நிறுவியதும் உங்கள் கணணியை Restart செய்யவும்.
Internet Download Manager தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.
இப்போது கீழே உள்ள லிங்கில் சென்று கிராக் தரவிறக்கம் செய்து Copy செய்து வைத்துக்கொள்ளவும்.
IDM Crack தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.
முதலில் C கோலன் ஓபன் செய்து Program File ஓபன் பண்ணவும். அதில் Internet Download Manager ஓபன் செய்யவும். இப்போது முதலில் Copy செய்து வைத்து இருந்த கிராக்கை இந்த இடத்தில் Paste பண்ணவும். Copy and Replace கொடுக்கவும்.
கீழே 32 bit, 64 bit இரண்டுக்கும் தனித்தனியாக RegKay உள்ளது. உங்கள் கணணிக்கு தேவையானதை தரவிறக்கம் செய்து கொள்ளவும்.
இப்போது தரவிறக்கம் செய்த RegKeyயை டபுள் கிளிக் செய்து ஓபன் செய்தால் வரும் விண்டோவிற்கு yas கொடுக்கவும். அடுத்து உங்கள் IDM Successfully added என்று வந்துவிடும் OK கொடுங்கள்.
Labels:
தொழில் நுட்பம்
மாதுளம் பழத்தின் மருத்துவ குணங்கள்
மாதுளம் பழத்தின் மருத்துவ குணங்கள் |
ரத்தத்தில் சிவப்பு அணுக்கள் குறைவாக இருப்பவர்களுக்கு மருத்துவர்கள் சொல்லும் அறிவுரையே மாதுளம் பழத்தை அல்லது சாறை அதிகம் உட்கொள்ளுங்கள் என்பதுதான். அந்த மாதுளம் பழம் பல்வேறு நோய்களைத் தீர்க்கும் அரிய மருத்துவக் குணத்தைத் தன்னுள்ளே கொண்டிருக்கிறது என்று இப்போதுதான் ஆராய்ச்சியில் கண்டுபிடித்திருக்கிறார்கள். வில்லோ மரத்திலிருந்து ஆஸ்பிரின் என்ற மருந்து கண்டுபிடிக்கப்பட்டதற்குச் சமமானது இந்தக் கண்டுபிடிப்பு என்று கூத்தாடுகிறது லண்டனிலிருந்து வெளியாகும் சண்டே எக்ஸ்பிரஸ் நாளிதழ். மாதுளம் பழத்தைச் சாப்பிடுகிறவர்கள்கூட அதன் கதுப்புகளை உட்கொண்டு கொட்டையைத் துப்பிவிடுகின்றனர். அதன் ரசத்தை மட்டுமே குடிக்கின்றனர். ஆனால் அதன் தோல்,விதை, மஞ்சள் நிறத்தில் உள்ளே காணப்படும் மெல்லிய சவ்வுப்படலம், அதன் பட்டை, செடியின் தண்டுக்குள்ளே இருக்கும் சோறு என்று அனைத்துமே அரிய மருத்துவ குணங்களைக் கொண்டிருக்கிறது. அவற்றிலிருந்து எடுக்கப்படும் சாறு இதயத் துடிப்பைச் சீராக்கும், இதய ரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பை நீக்கும், ரத்தக் கொதிப்பைக் குறைக்கும், உள் உறுப்புகளின் வீக்கத்தைக் கட்டுப்படுத்தி போக்கும், புற்றுநோய் வரும் ஆபத்தைக் குறைக்கும். மாதுளம் பழத்தின் அரிய மருத்துவத் தன்மைகள் அலோபதி என்கிற ஆங்கில மருத்துவர்களுக்கு வேண்டுமானால் இப்போது தான் தெரிந்திருக்கலாம். ஆனால் ஆயுர்வேதமும் சித்த வைத்தியமும் அதன் பலனை ஏற்கெனவே உணர்ந்தவைதான். |
Labels:
மருத்துவ செய்தி
தொலைக்காட்சி பார்ப்பதால் குழந்தையின் வளர்ச்சி பாதிக்கப்படும்: ஆய்வில் தகவல்
தொலைக்காட்சி பார்ப்பதால் குழந்தையின் வளர்ச்சி பாதிக்கப்படும்: ஆய்வில் தகவல் |
இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள் தொலைக்காட்சி பார்த்தால் அவர்களின் வளர்ச்சி பாதிக்கப்படுவதாக அமெரிக்க நிபுணர்களின் ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. குழந்தை மருத்துவத்துக்கான அமெரிக்க அகாடமி குழந்தைகள் தொலைக்காட்சி பார்ப்பதால் ஏற்படும் பின்விளைவுகள் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டது. ஆராய்ச்சியின் முடிவில் 2 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தொடர்ந்து தொலைக்காட்சி பார்த்து வருவார்களேயானால் அவர்களின் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படுவதாகக் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அத்தகைய குழந்தைகளின் பேச்சுத்திறன் தாமதப்படுவதாகவும் நிபுணர்கள் தெரிவித்தனர். இந்தக் குறைபாடுகளைப் போக்க இந்த வயது வரம்புக்குள்பட்ட குழந்தைகள் தொலைக்காட்சி பார்ப்பதை தவிர்க்க அவர்களிடம் பெற்றோர்கள் பேச்சுக் கொடுக்க வேண்டும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர். |
Labels:
முக்கிய செய்திகள்
பயனுள்ள மருத்துவ குறிப்புகள்
பயனுள்ள மருத்துவ குறிப்புகள் |
மருத்துவம் என்பது நோய்களைக் குணப்படுத்துவதற்கான கலையும், அறிவியலும் ஆகும். மனிதர்களின் உடல்நலத்தை பேணுதல், மீள்வித்தல் போன்றவற்றிற்காக உருவாக்கப்பட்ட செயல்முறைகளை உள்ளடக்கும். 1. சோற்றுக் கற்றாழையைச் சித்த மருத்துவத்தில் குமரி என அழைப்பர். இதுவும் ஒரு மூலிகையாகச் சேர்க்கப்படுகின்றது. அதன் நடுப்பகுதியைப் பிளந்து அதன் கசப்பான சாற்றை மோரில் கலந்து தினம்தோறும் உண்டு வந்தால் அல்சர் போன்ற நோய்கள் குணமாகும். மேலும் உடலில் இளமைத் தன்மை அதிகரிக்கும். 2. தினம் தோறும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் நாள்பட்ட தோல் நோய்கள் குணமாகும். நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிப்பதுடன் முகப்பொலிவும் உண்டாகும். 3. சர்க்கரை நோய் கட்டுப்பட வெந்தயத்தைப் அரைத்து தினம்தோறும் ஒரு கரண்டி சுடுநீரில் கலந்து சாப்பிட்டு வர வேண்டும். மேலும் சிறியாநங்கை, பெரியாநங்கையின் சாற்றையும் பயன்படுத்தலாம். 4. செம்பருத்தி பூவைக் காயவைத்து தூளாக்கி தலையில் சீயக்காய்போலத் தேய்த்துக் குளித்து வந்தால், பொடுகுத் தொல்லை போகும். நன்கு தலை முடி வளரும். முடி கொட்டுவதும் நின்றுவிடும். மேலும் கண்களுக்கும் உடலுக்கும் குளிர்ச்சி தரும். 5. மூச்சுக்கூட விடமுடியாமல் அதிகப்படியான இருமலாலும் சளியாலும் சிரமப்படும் குழந்தைகளுக்கு குப்பை மேனியின் சாற்றைப் பிழிந்து சிறிதளவு கொடுத்தால் சளிப் பிரச்னைகள் தீர்ந்து விடும். ஆனால் சரியான அளவில் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வயிற்றுப் போக்கு ஏற்படும். 6. இரவில் தினந்தோறும் நித்திரை வராமல் அவதிப்படுபவர்கள் சிறிதளவு வெந்நீரை அருந்திப் பின் படுக்கைக்குச் செல்ல வேண்டும். சர்க்கரை நோய் இல்லாதவர்கள் சிறிதளவு கருப்பட்டி அல்லது வெல்லம் அல்லது சர்க்கரையைச் சாப்பிட்ட பின் உறங்கச் செல்லலாம். 7. அருகம்புல்லைச் சாறாகவோ அல்லது பொடியாகவோ வாரம் ஒருமுறை சேர்த்துக் கொண்டால் இரத்தம் சுத்தமாவதுடன் உடல் உஷ்ணமும் தணியும். 8. எந்த மருந்துகளை உட்கொள்பவராக இருந்தாலும் மது அருந்தும் பழக்கம் உடையவராகவோ அல்லது புகைப்பிடிப்பவராகவோ இருந்தால் அது உடலில் மருந்தின் செயல்பாட்டு வீரியத்தைக் குறைக்கும். 9. உடல் வெளுப்பு மற்றும் தேமல் குணமாக வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்துக் குளித்து வரக் குணமாகும். 10. குருதிக் கொதிப்பு எனப்படும் இரத்த கொதிப்பு நோய் குணமாக இரண்டு அல்லது மூன்று நாளைக்கு ஒருமுறை அகத்திக் கீரையை உணவில் சேர்க்க குணம் ஏற்படும். |
Labels:
மருத்துவ செய்தி
ஜிமெயிலில் அனுப்பிய மின்னஞ்சலை திரும்ப பெறுவதற்கு
|
Labels:
தொழில் நுட்பம்
பிரிட்டன் கோர்ட்டில் முதன் முறையாக இந்திய நீதிபதி
பிரிட்டன் கோர்ட்டில் முதன் முறையாக இந்திய நீதிபதி
பிரிட்டன் ஐகோர்ட்டில் முதன்முறையாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வழக்கறிஞரான சீக்கியர் ஒருவர் நீதிபதியாகப் பொறுப்பேற்றுள்ளார்.
பிரிட்டன் ஐகோர்ட்டில் முதன்முறையாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வழக்கறிஞரான சீக்கியர் ஒருவர் நீதிபதியாகப் பொறுப்பேற்றுள்ளார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரபீந்தர் சிங்(47) என்பவர் லண்டனில் உள்ள ராயல் கோர்ட் வளாகத்தில் இயங்கி வரும் ஐகோர்ட்டின் நீதிபதியாக நேற்று முன்தினம் பொறுப்பேற்றுள்ளார்.
இவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்தவர். இவர் 2007ல் இந்திய டாக்டர்களின் குடியேற்ற உரிமை தொடர்பான வழக்கில் சிறப்பாக வாதாடியவர்.
கடந்த 22 ஆண்டுகளாக பிரிட்டனில் வழக்கறிஞராகப் பணியாற்றி வருபவர். தனது நியமனம் குறித்து அளித்த பேட்டியில்,"எனது பணி மூலம் நான் ஒரு சிறந்த முன்னுதாரணமாக இருக்க முயல்வேன்” என ரபீந்தர் சிங் கூறினார்.
Labels:
முக்கிய செய்திகள்
கடாபியை சுட்டுக் கொண்ட வாலிபர் பரபரப்பு பேட்டி
கடாபியை சுட்டுக் கொண்ட வாலிபர் பரபரப்பு பேட்டி |
[ ஞாயிற்றுக்கிழமை, 23 ஒக்ரோபர் 2011, 08:32.33 மு.ப GMT ] |
லிபிய முன்னாள் அதிபர் கடாபியை சுட்டுக் கொன்றது நான் தான் என்று வாலிபர் ஒருவர் கூறியுள்ளார். லிபிய முன்னாள் அதிபர் கடாபியை எதிர்த்து கடந்த 9 மாதங்களாக புரட்சிப் படையினர் தாக்குதல் நடத்தி வந்தனர். கடந்த 20ம் திகதி சொந்த ஊரான சிர்தேவில் சுட்டுக் கொல்லப்பட்டார். இதுகுறித்து ஐ.நா. அறிக்கை கேட்டுள்ளது. இந்நிலையில் கடாபியை சுட்டுக் கொன்றது நான்தான் என்று சனாத் அல்சதக் அல்யுரிபி என்ற வாலிபர் கூறியுள்ளார். இதற்கு ஆதாரமாக இன்டர்நெட்டில் புதிய வீடியோவையும் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் சனாத்தை சிலர் பேட்டி எடுக்கின்றனர். அவரை சுற்றி சிலர் ராணுவ உடையில் இருக்கின்றனர். சிலர் சனாத்தை பாராட்டுகின்றனர். கடாபியின் தங்க மோதிரம், ரத்தக் கறை படிந்த சட்டையை காட்டுகின்றனர். அந்த தங்க மோதிரத்தில் கடாபியின் 2வது மனைவி சபியாவின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. பேட்டியின் போது, கடாபியை 2 முறை துப்பாக்கியால் சுட்டேன். ஒரு குண்டு அவரது தோளிலும் மற்றொரு குண்டு தலையிலும் பாய்ந்தது. ஆனால் கடாபி உடனடியாக சாகவில்லை. அரை மணி நேரம் கழித்துதான் இறந்தார் என்று சனாத் கூறியுள்ளார். |
Labels:
முக்கிய செய்திகள்
ஓன்லைனிலேயே புகைப்படங்களை எடிட் செய்வதற்கு
ஓன்லைனிலேயே புகைப்படங்களை எடிட் செய்வதற்கு
ஓன்லைனிலேயே புகைப்படங்களை எடிட் செய்வதற்கு |
[ ஞாயிற்றுக்கிழமை, 23 ஒக்ரோபர் 2011, 10:45.36 மு.ப GMT ] |
புகைப்படங்களை எடிட் செய்வது என்பது பலருக்கும் பிடித்த ஒன்று. ஆனால் அனைவராலும் இயலாத ஒரு விடயம். புகைப்பட எடிட்டிங் மென்பொருள்கள் பாவிப்பதற்கு கடினமாக இருப்பதால் பலர் விருப்பம் இருந்தும் புகைப்பட எடிட்டிங்கில் இருந்து விலகியே இருக்கிறார்கள். இப்படியானவர்களுக்காக இப்போது பல இணையத்தளங்கள் ஓன்லைனிலேயே இலகுவான புகைப்பட எடிட்டிங் அப்ளிகேசன்களை அறிமுகப்படுத்தியிருக்கின்றன. யாரும் இலகுவாக கையாளக்கூடியவாறு பயனர் இடைமுகத்தை கொண்டிருப்பதால் பயன்படுத்துவது இலகு. அத்துடன் எடிட் செய்த புகைப்படங்களை இங்கிருந்தே சமூக வலைத்தளங்கள், மின்னஞ்சல் மூலமாகவும் பகிர்ந்து கொள்ளும் வசதியும் இணைக்கப்பட்டுள்ளது. |
Labels:
தொழில் நுட்பம்
வீட்டிலேயே இருக்கு எளிய வைத்தியம்
வீட்டிலேயே இருக்கு எளிய வைத்தியம்
கடுமையான இருமல் இருந்தால் 3 கப் தண்ணீருடன் வெற்றிலையையும், மிளகையும் போட்டு கொதிக்க வைத்து குடித்து வரவும்.
பல் வலி குறைய துளசி இலை 2, கொஞ்சம் உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை வலி இருக்கும் இடத்தில் வைத்து அழுத்தி வரவும். வலி குறையும்.
சருமத்தில் உள்ள சிறு தழும்புகளைப் போக்க குளிக்கும் நீரில் துளசி இலைகளை போட்டு குளிக்கவும். விரைவில் தழும்புகள் மறையும்.
குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல் மற்றும் இருமலுக்கு நீருடன் தேனைக்கலந்து கொடுத்தால் விரைவில் இருமல் நிற்கும். காய்ச்சல் குறையும்.
காரட் மற்றும் தக்காளிச் சாறு இதனுடன் கொஞ்சம் தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் உடல் வலிமை பெரும்.
வயிற்றுப் போக்கை உடனடியாக நிறுத்த கொய்யா இலைகளை மென்று தின்றால் போதுமானது.

இஞ்சியும் மருத்துவ குணமும்
இஞ்சியும் மருத்துவ குணமும்
மணத்திற்காகவும், சுவைக்காகவும், மருத்துவக் குணங்களுக்காவும் நம்முடைய சமையல் பலவற்றில் இஞ்சியைப் பயன்படுத்துகிறோம். இஞ்சியின் மேல் உள்ள மணலை நீக்கி நன்றாகச் சுத்தம் செய்து வேக வைத்து வெயிலில் உலர்த்திய பின் கிடைப்பதுதான் சுக்கு!
100 கிராம் இஞ்சியில் தண்ணீர் 80.9 விழுக்காடும், புரோட்டீன் 2.3 விழுக்காடும்,கொழுப்பு 0.9 விழுக்காடும், தாதுக்கள் 1.2 விழுக்காடும், நார்ச்சத்து 2.4 விழுக்காடும்,கார்போஹைட்ரேட்ஸ் 12.3 விழுக்காடும் உள்ளன. மற்றும் கால்சியம் 20 மில்லிகிராமும் பாஸ்பரஸ் 60 மில்லி கிராமும் இரும்பு 2.6 மில்லிகிராமும் வைட்டமின் சி 6 மில்லி கிராமும் சிறிதளவு வைட்டமின் `பி'யும் உள்ளன.
ஆயுர்வேதா, சித்தா, யுனானி முறைகளில் தயாரிக்கப்படும் மருந்துகள் பலவற்றில் இஞ்சி முக்கிய இடத்தைப் பெறுகிறது. வாயு சம்பந்தமான பிரச்சினைகளுக்கும் அஜீரணக் கோளாறுகளுக்கும் இஞ்சி ஒரு நல்ல நிவாரணி. வயிற்றுவலி, வாந்தி, பித்தம் மற்றும் வயிற்றில் ஏற்படும் பல தொந்தரவுகளையும் இஞ்சி நிவர்த்தி செய்யும். சாப்பிட்ட பின்பு சிறிது இஞ்சியைச் சாப்பிட உமிழ்நீரின் அளவை அதிகப்படுத்தி வயிற்று உபாதைகளைச் சரிசெய்கிறது.
அரை ஸ்பூன் இஞ்சிச்சாறு, ஒரு ஸ்பூன் எலுமிச்சம்சாறு, ஒரு ஸ்பூன் புதினாச்சாறு, ஒரு ஸ்பூன் தேன் ஆகிய நான்கினையும் ஒன்றாகக் கலந்து தினம் மூன்று வேளை சாப்பிட பித்தத்தினால் ஏற்படும் வாந்தி, மசக்கையினால் ஏற்படும் வாந்தி, மஞ்சட்காமாலை, மூலம், மாமிச உணவை அதிகமாகச் சாப்பிடுவதால் ஏற்படும் கோளாறுகள், கொழுப்புச் சத்து அதிகம் உள்ள பொருட்களைச் சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சினைகள் ஆகியவற்றைச் சரி செய்யும்.
அடிக்கடி இருமலினால் கஷ்டப்படுபவர்கள் இஞ்சிச் சாறும் தேனும் கலந்து ஒரு நாளைக்கு மூன்று முறை சளியில் இருந்து விடுபடும் வரை சாப்பிட வேண்டும். இஞ்சியைச் சிறிது சிறிதாக வெட்டி தண்ணீரில் இட்டு சிறிது நேரம் கொதித்தவுடன் வடிகட்டி சிறிது சர்க்கரையுடன் சூடாக பருக மூக்கில் நீர் வடியும் பிரச்சினை சரியாகும். சளியினால் ஏற்படும் காய்ச்சலுக்கு மருந்துகளுடன் இஞ்சி டீ சாப்பிட மனதிற்குப் புத்துணர்வு கிடைக்கும்.
இரண்டு ஸ்பூன் வெந்தயத்தை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி கிடைக்கும் கஷாயத்துடன் அரை ஸ்பூன் இஞ்சிச்சாறும் சிறிது தேனும் கலந்து பருக நுரையீரல் போன்றவற்றில் அடைத்துக் கொண்டிருக்கும் சளி தானாகவே வெளியேறிவிடும். வயிற்றில் புண் இருப்பவர்களுக்கு இந்த கஷாயத்தைக் கொடுக்கக் கூடாது. சளியினால் தலைவலி ஏற்பட்டால் சுக்கை சிறிது நீர் விட்டு உறைத்து வலி இருக்கும் இடங்களில் லேசாகத் தடவவேண்டும்.
அரை ஸ்பூன் இஞ்சிச் சாற்றை அரை வேக்காடு முட்டை மற்றும் தேன் ஆகியவற்றைக் கலந்து தினம் ஒரு முறை இரண்டு மாதங்கள் சாப்பிட உணர்வு நரம்புகளைப் புதுப்பித்து ஆண்களின் மலட்டுத் தன்மையைப் போக்குவதுடன் உடலிற்கு புதுப்பலத்தையும் அளிக்கும். தற்பொழுது ஜிஞ்சர் பிரட், ஜிஞ்சர் கேக், இஞ்சி ஊறுகாய், ஜிஞ்சர் வைன், ஜிஞ்சர் பீர் போன்ற எண்ணற்ற பொருட்கள் இஞ்சியைத் துணைப் பொருட்களாகக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன.

புற்றுநோய் பரவலைத் தடுக்கும் பீட்ரூட்
புற்றுநோய் பரவுவதை தடுக்கும்...
மலச்சிக்கலைப் போக்கும்...
பித்தத்தைக் குறைக்கும்...
அரிப்பு - எரிச்சலைத் தவிர்க்கும்...
கிட்னியில் சேர்ந்துள்ள தேவையற்றவைகளைப் போக்கிவிடும்.
அழகிய நிறமும் நிறைய சத்துக்களும் கொண்ட காய் பீட்ரூட். இதனுடைய நிறத்திற்காகவே இதனை அனைவரும் விரும்பி உண்கின்றனர். பீட்ரூட்டில் உள்ள கார்போஹைட்ரேட்ஸ் சர்க்கரை துகள்களாக இருப்பதால் இது விரைவில் ஜீரணமாகி நம் ரத்தத்துடன் கலந்து விடுகிறது.
ஒரு 100 கிராம் பீட்ரூட்டில் தண்ணீர் 87.7 விழுக்காடும், புரோட்டின் 1.7 விழுக்காடும், கொழுப்பு 0.1 விழுக்காடும், தாதுக்கள் 0.8 விழுக்காடும், நார்ச்சத்து 0.9 விழுக்காடும், கார்போஹைட்ரேட் 8.8 விழுக்காடும் உள்ளது. மேலும், கால்சியம் 18 மில்லி கிராமும், பாஸ்பரஸ் 55 மில்லி கிராமும், இரும்பு 1.0 மில்லிகிராமும், வைட்டமின் சி 10 மில்லிகிராமும், வைட்டமின் ஏ மற்றும் பி1, பி2, பி6 நியாசின் வைட்டமின் பி ஆகியவற்றுடன் சோடியம், பொட்டாசியம், சல்பர், க்ளோரின், ஐயோடின், காப்பர் போன்ற சத்துக்களும் பீட்ரூட்டில் உள்ளன.
கிட்னி, பித்தப்பை ஆகியவற்றில் சேர்ந்துள்ள தேவையற்ற அழுக்குகளை நீக்குவதுடன் பீட்ரூட் ஒரு சிறந்த சுத்திகரிப்பானாகவும் செயல்படுகிறது. பீட்ரூட்டில் உள்ள இரும்புச்சத்து நம் உடலில், புதியதாக இரத்த அணுக்கள் உருவாக துணை புரிகிறது. பச்சைக் காய்கறிகள், கீரைகள், பழங்கள், பேரீச்சம் பழம், அத்திப்பழம் ஆகியவற்றை அதிக அளவு உண்டும், இரத்தத்தின் அளவு அதிகரிக்காமல் இருக்கும் பட்சத்தில் பீட்ரூட்டை வாரத்திற்கு நான்கு நாட்கள் உண்டால் நல்ல பலன் கிடைக்கும். சமையல் செய்து சாப்பிடுவதுடன் பச்சையாகவும் சாப்பிடலாம்.
கல்லீரல் கோளாறுகளுக்கும் பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். பித்தம் அதிகமாகி அடிக்கடி பித்த வாந்தி எடுப்பவர்களுக்கு பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். பீட்ரூட் கீரையையும் மற்ற கீரைகள் போல் சமையல் செய்து சாப்பிட அல்சர், மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் சரியாகும்.
பல மாதங்களாக மலச் சிக்கலினால் துன்பப்படுபவர்களும் மூலக் கோளாறினால் துன்பப்படுபவர்களும் பீட்ரூட் சாறை தண்ணீருடன் கலந்து அரை டம்ளர், இரவு படுக்கைக்கு முன் அருந்த வேண்டும். பீட்ரூட்டை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் கிட்னியில் கற்கள் உருவாவதைத் தடுக்கலாம்.
தோலில் ஏற்படும் அரிப்பு, எரிச்சல் போன்றவற்றிற்கு இரண்டு பங்கு பீட்ரூட் ஜூசுடன் ஒரு பங்கு தண்ணீரைக் கலந்து தடவினால் பிரச்னையிலிருந்து விடுபடலாம்.
தலையில் ஏற்படும் வெள்ளை நிற பொடுகுகளைக் களைய பீட்ரூட் ஜூஸை பொடுகு இருக்கும் இடங்களில் மசாஜ் செய்து இரண்டு மணிநேரம் கழித்து சீயக்காய் பவுடர் கொண்டு தலை குளித்தால் நாளடைவில் பொடுகுகள் சரியாவதுடன் உங்கள் தலைமுடியும் பளபளவென்று மின்னும்; தலையில் அதிக முடி முளைக்கும்.
புற்றுநோயினால் (Cancer) துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் நோயாளிகள், ஊட்டி பீட்ரூட் ஜூஸ் தினமும் 1 டம்ளர் பருகி வந்தால் புற்றுநோய் பரவுவது தடுக்கப்படும். ஆரம்ப நிலையிலுள்ள புற்றுநோயை குணமாக்கும் வல்லமையும் படைத்தது பீட்ரூட்என்பது குறிப்பிடத்தக்கது.

Subscribe to:
Posts (Atom)